மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம்,விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மாணித்தாக்கூர் பேசுகையில், அதிமுக இப்போது அமித் ஷா திமுகவாக மாறிவிட்ட நிலையில் , அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளதால் இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர் பி உதயகுமார் , அவர் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்திற்கு கடைசி தேர்தல் இதுவே தான், அடுத்த முறை அவர் தேர்தலில் போட்டியிடும் போது தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுவார் என்றார்.
திருமங்கலம் காங்கிரஸ் கூட்டம்
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வடக்கு தொகுதியை கேட்ட நிலையில்மேலூர் கொடுக்கப்பட்டதால் பிரச்சாரம்இந்த அளவில் உள்ளது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு28 இடங்கள் கேட்டிருந்தாலும் எதற்காக மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றால் பாஜக,ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் காலூன்றாமல் இருப்பதற்கும் பாஜக ஆர் எஸ் எஸ் வளர்வதற்காக பழனிச்சாமி வழிவிட்டாலும்அதை விடாமல் தடுப்பதற்காக மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.
டென்ஷன் ஆகும் திமுக ஆதரவாளர்கள்! காரணம் காங்கிரஸ்?
தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது அர்ஜுனா கூறியது குறித்த கேள்விக்கு
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தமட்டில் திமுக மதச்சார்பற்ற கூட்டணியை காங்கிரஸ் தலைவர் அதிகாரத்தின் கார்கே அறிவித்துள்ளார்.அதை உறுதி செய்த பின்னர் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் வேலை பார்த்து வருகிறோம்.தேவையில்லாமல் குழப்ப வேண்டாம் இங்கே காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றார்.
உதயகுமார் இரட்டை இலையில் போட்டி போடும் கடைசி தேர்தல்
விஜயின் பரப்பரைக்கு காவல்துறை அனுமதி மறுப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எல்லா கட்சிகளுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. கடந்த ஐந்தாம் தேதிராகுல் காந்தி வருவதாக இருந்தது.பாதுகாப்பு கருதி அனுமதி கொடுக்காததால் வர முடியவில்லை.பாதுகாப்பு என்பது முக்கியம் எல்லா கட்சிகளுக்குமே அந்த பிரச்சனை உள்ளது கேட்டவுடன் அனுமதி கொடுக்க வேண்டும் என சொல்ல முடியாது.ராகுல் காந்தி மிக விரைவில் பிரச்சாரத்திற்கு வர உள்ளார். ராகுல் மூத்தவரை பாஜக அரசு திடீரென்று தேர்தலுக்கு நடுவில் பாராளுமன்றத்தை கூட்டி உள்ளது.
புதிதாக பாஜக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கூடுதலாக 117 தொகுதிகளை உருவாக்க யாருக்கும் தெரியாமல் மோடி, அமித்ஷா வேலை பார்த்து வருகின்றனர்.இதைப் பற்றிய விவாதங்களில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார்.இப்போதுதான் அஸ்ஸாம்,கேரளா,புதுச்சேரியில் சண்டை முடிந்துள்ளது.அடுத்ததாக தமிழ்நாடு உள்ளது இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டிய உள்ளது.
முகத்தில் ராகுல் காந்தி பிரசாத்துக்கு வருவார்- எவ்வளவு தூரம் மோடியும் அமித்ஷாவும் வருகிறார்களோ அது பாஜகவுக்கு நஷ்டம்எவ்வளவு தூரம் ராகுல் காந்தி வருகிறாரோ அது மதச்சார்பற்ற கூட்டணிக்கு லாபம் என்றார்.தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர் வேலூரில் காங்கிரஸ் கட்சியினருக்குள் எந்த பிரச்சினையும் இல்லை நிச்சயம் காங்கிரஸ் வேட்பாளர் மிகப் பெரிய வெற்றி பெறுவார் என்றார்.
