அனிருத், காவ்யா மாறன் திருமணம்: சொத்துமதிப்பு ரூ. 469 கோடி, வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

அனிருத், காவ்யா கல்யாணம்: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், SRH அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. நவம்பர் 11ம் தேதி கிரீஸில் தான் நடக்கிறது என்று அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த தகவல் உண்மை என்பது தற்போது தெரிந்துவிட்டது.

தன் ஆசை மகள் காவ்யாவின் திருமண வரவேற்புக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் சன் குழும தலைவர் கலாநிதிமாறன். அது திருமணத்திற்கான அழைப்பு கிடையாது நவம்பர் 21ம் தேதி சென்னையில் நடக்கும் திருமண வரவேற்புக்கான அழைப்பு ஆகும். இந்நிலையில் அனிருத், காவ்யாவின் சொத்துமதிப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அனிருத் சொத்துமதிப்பு: ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ-வான காவ்யா மாறனின் சொத்துமதிப்பு ரூ. 409 கோடி ஆகும். இங்கிலாந்தில் இருக்கும் வார்விக் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர் காவ்யா. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் அனிருத்தின் சொத்துமதிப்பு ரூ. 60 கோடி என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் தான் தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடினார் அனிருத். அவரை விட இரண்டு வயது சிறியவர் காவ்யா மாறன். அனிருத், காவ்யா திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கிறார்கள். திருமணத்திற்கு என்று அழைப்பிதழ் எதுவும் அச்சடிக்கப்பட்டு இதுவரை கொடுக்கப்படவில்லை என என்.டி.டிவி தெரிவித்திருக்கிறது.

மாறன்கள் ஏற்பாடு: கிரீஸுக்கு வரும் விருந்தினர்களுக்கு பர்சனலாக மெசேஜ் அனுப்பி அழைக்கிறார்களாம். நவம்பர் 10, 11 என இரண்டு நாட்கள் கிரீஸில் திருமண கொண்டாட்டம் நடக்கவிருக்கிறது. திருமண ஏற்பாடுகளை பெண் வீட்டார் தான் செய்து வருகிறார்கள். விமான போக்குவரத்து, தங்கும் இடம், சாப்பாடு என அனைத்து வேலையையும் மாறன் குடும்பத்தார் பொறுப்புடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் குடும்பத்துடன் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது. அனிருத் என் மகன் மாதிரி. ரொம்ப நல்ல பையன், கடும் உழைப்பாளி என அவரை மேடைக்கு மேடை பாராட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

அனிருத் ரிசப்ஷன்: கிரீஸில் திருமணம் முடிந்த பிறகு சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு அனிருத், காவ்யா மாறனை வாழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர் சி. மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் நடந்தது. அது தான் அவர் முதல்வராக கலந்து கொள்ளும் முதல் திருமண விழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரால் கோவாவுக்கு செல்ல முடியவில்லை.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இதையடுத்து அனிருத் திருமண வரவேற்பில் முதல்வர் விஜய் நிச்சயம் கலந்து கொள்வார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. விஜய்க்கு மிகவும் பிடித்த மற்றும் நெருக்கமான இசையமைப்பாளர் அனிருத் ஆவார். இதற்கிடையே அக்டோபர் 15ம் தேதி ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தியேட்டருக்கு வந்திருந்தார் அனிருத். அப்பொழுது அவருக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் காவ்யாவை பார்த்ததும் திருமண அறிவிப்பு எப்பொழுது என ரசிகர்கள் கேட்ட நிலையில் நல்ல செய்தி வந்திருக்கிறது.

Source link