சென்னையில் உள்ள அனைவரின் போன்களிலும் ஒரே நேரத்தில் ஒலித்த எச்சரிக்கை அலாரம்- காரணம் என்ன – warning alarm sounds simultaneously on chennai peaple phones on oct 18th

சென்னையில் உள்ள மக்களின் கைப்பேசிகள் (மொபைல் ஃபோன்) அனைத்திற்கு இன்று மதியம் 2.25 மணி போல ஒரு எச்சரிக்கை அலாராம் ஒலித்துள்ளது. மேலும் இந்த எச்சரிக்கை அலாரத்துடன் , கைப்பேசியின் திரையில் சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். – TNSDMA என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அனுப்பட்ட எச்சரிக்கை செய்தி ஆகும்.

இது பிற்பகல் 2:15 மணியளவில் சென்னையில் உள்ள அனைவரின் கைபேசிகளுக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கைகாக அனுப்பட்டது.

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கி, நேற்று தீவிரமடைந்துள்ளது. பொதுவாக பருவமழை என்றாலே பெரிதும் பாதிக்கப்படுவது சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள மாவட்டங்கள். இந்த நிலையில், நேற்று மாலை முதல் சென்னையில் விடிய விடிய விடி மற்றும் மின்னலுடன் கூடிய அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல முக்கிய சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

Source link