இதில் போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்பி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், போடி திமுக கிழக்கு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மற்றும் பாக முகவர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய தங்கதமிழ்செல்வன் எம்பி, போடிநாயக்கனூர் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 121 பூத்களில் அதிக வாக்குகள் பெறும் பூத்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்செல்வன் சொன்னது போல போடி கிழக்கு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத்களில், எதிர்கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்றுத் தரும் பூத்களுக்கு தனது சார்பிலும் 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றார்.
டென்ஷன் ஆகும் திமுக ஆதரவாளர்கள்! காரணம் காங்கிரஸ்?
மேலும் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் ஒன்றிய செயலாளர்களுக்கு 5 சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தார். இது போன்றதொரு கடைமைகள், முயற்சிகளை நாம் எடுப்பதற்கான காரணம் என்னவென்றால் தமிழகத்தில் 5 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி புரியும் தளபதி ஸ்டாலின், எந்த சூழ்நிலையிலும் யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் தலை வணங்காமல் தமிழகத்தின் அருமை பெருமைகளை கட்டிக் காக்கும் முதலமைச்சர் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு நாம் அனைவரும் கடமையாற்றிட வேண்டும் என்பதற்காக தான் என்று கூறினார்.
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக அமைப்பு ரீதியாக தேனி வடக்கு – தெற்கு, போடி கிழக்கு – மேற்கு மற்றும் சின்னமனூர் மேற்கு ஒன்றியம் என 5 ஒன்றிய செயலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
