இயற்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது: இதுபோன்ற வானிலை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை- பாமக தலைவர் அன்புமணி – pmk leader anbumani about chennai rain in oct 17th for ature is issuing a warning to us

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையின் பல்வேறு இடங்களுல் கடும் இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று மழையின் போது அவர் எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் , தனது சமூக வலைதளப்பக்கத்தில், வீடியோ ஒன்றை பதிவிட்டு, இயற்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. நாம் அனைவரும் பாதுகாப்ப இருக்க வேண்டும் எனறும், அதே சமயம் நமது பூமியை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அன்மணி ராமதாஸ் பகிர்ந்த வீடியோ

அவர் மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில், மழை பெய்த படியே தொடர்ந்து பயங்கரமான இடி மற்றும் மின்னல்கள் ஏற்பட்டது. அந்த மின்னல் ஒலியில் அவரது வீட்டிற்கு முன்னாள் உள்ள இடங்கள் மற்றும் கடல் ஆகியவை பகல் நேரத்தில், சூரிய வெளிச்சத்தில் தெரிவது போல காட்சி அளித்தது.

அன்புமணி ராமதாஸ் பதிவு

இதனை குறிப்பிட்டே, இதுபோன்ற வானிலை நிலவரங்களை நான் இதற்கு முன்பு ஒருபோதும் பார்த்ததில்லை. நாம் தற்போது எதிர்கொண்டு வரும் சூழல், காலநிலை மாற்றம் என்பது உண்மை என்பதையும், அதன் பாதிப்புகளை இனியும் நாம் புறக்கணிக்க முடியாது என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது என தெரிவித்துள்ளார்.

விழிப்புடன் இருக்க வேண்டும்

மேலும் காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ போன்ற காலநிலை நிகழ்வுகள் வானிலை முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். அறிவியல் அடிப்படையிலான எச்சரிக்கைகளைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார்நிலையையும் வலுப்படுத்த வேண்டும் எனவும்.

எச்சரிக்கை விடுக்கும் இயற்கை

தொடர்ந்து நேற்று இரவு இந்தக் காணொளியைப் பதிவு செய்தபோது, இயற்கை நமக்கு ஒரு எச்சரிக்கையை விடுப்பதைப் போல உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார். அந்த எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொண்டு, பொறுப்புடன் செயல்பட்டு, நம் மக்களையும் நமது பூமியையும் பாதுகாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு வலியுறுத்தல்

நேற்று சென்னையில் மழை நீர் தேங்கிய நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், சென்னை மாநகரம் இன்னொரு முறை வெள்ளத்தில் மிதக்கக் கூடாது. இதையும், சென்னையில் மேக வெடிப்பு போன்ற நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிட்டு அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னையின் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Source link