3 ஓவர்கள் மட்டும் வீசி 9 விக்கெட்டுளை கைப்பற்றி அசத்தல்

சி.டி. கோபிநாத் தனது 96வது வயதில் காலமானார் :

இந்தியாவின் மிக மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத், தனது 96வது வயதில் சென்னையில் காலமானார். 1952-ஆம் ஆண்டில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்தியா தனது முதலாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்ற அணியில் இவர் அங்கம் வகித்தார்.

3 ஓவர்கள் மட்டும் வீசி 9 விக்கெட்டுளை கைப்பற்றி அசத்தல் :

பிரேசில் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை லாரா கார்டசோ, லெசோதோ நாட்டு அணிக்கு எதிராக 3 ஓவர்கள் மட்டும் வீசி 9 விக்கெட்டுளை கைப்பற்றினார்.பிரேசில் சுழற்பந்துவீச்சாளர் லாரா கார்டசோவின் அசத்தலான பந்துவீச்சால் லெசோதோ அணி 6.2 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

ஆர்சிபி-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை :

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளன. கவுகாத்தியில் இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நடப்பு தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இரு அணிகளும் இன்று களம்காணவுள்ளதால் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் :

2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஃபிஃபா போட்டிகள் தொடங்க இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், இந்தியாவில் ஒளிபரப்பும் ஊடக உரிமைகள் விற்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஒளிபரப்பாளர்கள் உரிமைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link