ஆகாஷ் பாஸ்கரனுடன் உதயநிதி ஸ்டாலின் விமானப் பயணமா? துபாய் பயணத்தின் பின்னணி என்ன? – dmk udhayanidhi stalin aakash baskaran dubai trip and political reason

தமிழக டாஸ்மாக் துறையில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்குப் பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, கடந்த 16.05.2025 அன்று அமலாக்கத் துறையினர் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள சூழலில், இன்று (18.10.2026) உதயநிதி ஸ்டாலினும் ஆகாஷ் பாஸ்கரனும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து விமானத்தில் துபாய் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பயணம் தொடர்பான தகவல்கள் மற்றும் அதன் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாத நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது

Source link