தமிகத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கிய ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு, தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகிறது. இந்நிலையில், ஜெம் வீரமணியின் மேலாளர் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் கைதான ஜெம் வீரமணிக்கு உதவியதாக மேலாளர் சக்திவேல் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சக்திவேல் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக போலீசார் தகவல் தெருவித்துள்ளனர். மேலும் வீரமணியின் பண்ணை வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் தொழில்துறையில் அறியப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் (Gem Granites) நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி, சிறுமி பாலின வன்கொடுமை வழக்கு (POCSO Case) தொடர்பாக அண்மையில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஜெம் வீரமணி போக்சோ வழக்கில், சென்னையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
7 போக்சோ வழக்கு பதிவு
ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகாரளித்த நிலையில், 7-வது வழக்கைப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக இவர் மீது 6 சிறுமிகள் புகார் அளித்திருந்த நிலையில், இன்று மேலும் ஒரு சிறுமி புகாரளித்துள்ளார்.
போலீசார் விளக்கம்
ஜெம் வீரமணி மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மற்றுமொரு சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் இன்று (18.10.2026) ஏழாவதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழக்கிலும் வீரமணியின் பெண் தோழியான சாந்தி வீட்டில் சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சிக்கிய முக்கிய ஆதாரங்கள்
ஜெம் வீரமணி மீது பதியப்பட்ட இரண்டாவது வழக்கில் ஜெம் வீரமணியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து புழல் சிறையில் வைத்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். உட்படுத்தப்பட்டு, மேலும் இவ்வழக்குகள் தொடர்பாக ஜெம் வீரமணியின், லாயட்ஸ் ரோடு வீடு, கானத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் அவரது சாமுண்டீஸ்வரி நேச்சுரல் Stone அலுவலகம் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேனஜர் சக்திவேல் கைது
வீரமணிக்கு உதவிய ஜெம் மேலும் இவ்வழக்கு தொடர்பாக கிரானைட் நிறுவனத்தின் மேனஜர் சக்திவேல் என்பவர் இன்று (18.10.2026) கைது செய்யப்பட்டார். ஜெம் வீரமணியின் மேனேஜர் சக்திவேல் என்பவர் மூலம் வீரமணி அவர்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப்பரிமாற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பதினொரு சிறுமிகள் குறித்த புகார்களின் பேரில் வீரமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Source link
