பாட்னா,
தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பீகாரின் சுகாதார துறை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. பீகாரின் மருத்துவமனைகளில், சில நேரங்களில் பஞ்சு இருப்பதில்லை, பஞ்சு இருக்கும் இடத்தில் ஊசி இருப்பதில்லை; சில நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை, சில நேரங்களில் மருந்துகள் இருப்பதில்லை, சில நேரங்களில் படுக்கைகள் இருப்பதில்லை.
இப்போது நிலைமை என்னவென்றால், மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி கூட கிடைப்பதில்லை. வேறு வழியின்றி, நோயாளிகள் சில நேரங்களில் மிதிவண்டிகளிலும், சில நேரங்களில் கட்டில்களிலும், சில நேரங்களில் ஸ்கூட்டர்களிலும் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
மருத்துவமனையில் மருத்துவர் இல்லை, சக்கர நாற்காலி இல்லை, மருந்துகள் இல்லை, சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இல்லை, சுகாதார பணியாளர்கள் இல்லை என்றால், அதை எதற்காக மருத்துவமனை என்று அழைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
வெறும் செங்கல் மற்றும் சிமெண்ட், மணல் மற்றும் தண்ணீர் கலந்த கலவையில் ஒரு கட்டிடத்தை எழுப்பி, அதை மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை என்று பெயரிடுவதால் மட்டும் சுகாதார சேவைகள், வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் வலுப்பெற்றுவிடுமா என தெரிவித்தார்.
இந்த கட்டிடங்கள் பெரும் தரகுத்தொகையை அள்ளுவதற்காகவே கட்டப்படுகின்றன, இல்லையென்றால், மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோரை நியமிக்காமல் இருந்தால், இந்த மருத்துவமனை கட்டிடங்களில் புறாக்கள் மட்டுமே வசிக்கும்.
