கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு- முதல்வர் விஜய் மீது மு. க. ஸ்டாலின் விமர்சனம் – mk stalin criticized cm vijay for tamil nadu become a hub for murders and drug

தமிழகத்தில் கடந்தி சில நாட்களாக மீண்டும் கொலைகள் நடைபெறுவது வழக்கமாகியுள்ளது. மேலும் நேற்று சிவகங்ககையில் ரவுடி சுள்ளான் மதன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர் நாகை தவெக நிர்வாகி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின், CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள் என கடுமையாக முதல்வர் விஜய்-ஐ விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் அறிக்கை

சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, “ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?” என நான் கேள்வி எழுப்பியிருந்தேன் என முன்னர் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி அவர்,

அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது தெரிவித்துள்ள அவர், கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை என குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் மீது வைக்கப்படும் விமர்சனம்

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து கொலைகள் அதிகரித்து உள்ளதாகவும், குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள்

கடந்த மாதம் இதே சிவகங்கையில் நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் கடந்த வாரத்தில் ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 8 பேர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே போல் மதுரையில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இப்படியாக கொலைகள் நடைபெற்றதாக திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து, கேள்வி எழுப்பினர்.

முதக்வர் திரைப்படங்களால் கற்றுக்கொள்கிறார்களா?

வேதாரண்யத்தில் தவெக ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற தவெக நிர்வாகி மெத் பூபாலனும் கைதாகியுள்ளார் என தெரிவித்துள்ள மு. க. ஸ்டாலின், முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், காவல்துறையில் முதல்வர் விஜய் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள் வெட்டுகளும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக் கடத்தல்களும் காண்பிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

Source link