ஆனால் இதுகுறித்து வெளிப்படையாக பிரவீன் சக்கரவர்த்தி இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையின் அனுமதியோடு தான் விஜய்யை சந்தித்ததாக பிரவீன் சக்கரவர்த்தி கூறியிருக்கின்றார். இந்த கருத்து தான் தற்போது பேசும்பொருளாக மாறியிருக்கின்றது. அப்படியென்றால் உண்மையிலேயே காங்கிரஸ் தலைமை விஜய்யுடன் கூட்டணி வைக்க விரும்பினார்களா ? என்ற கேள்வி எழுகின்றது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு விளக்கம் கொடுத்திருக்கின்றார். அவர் கூறியது, காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர் பல மாதங்களுக்கு முன்பே இதுகுறித்து கூறியிருக்கின்றார். விஜய்யை சந்தித்து பேசுவதற்கு அனுமதி வழங்கவில்லை என தெளிவாக கூறியிருக்கின்றார். மேலும் கட்சியை சேர்ந்த சிலர் தனி தனியாக பிற கட்சி தலைவர்களை சந்திப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் அவர் கூறிவிட்டார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தமிழகத்திற்கு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தான்.
அவரே விஜய்யை சந்திக்க தலைமை அனுமதிக்கவில்லை என கூறிவிட்டார். எனவே அதுதான் இறுதி முடிவு என்றார் தங்கபாலு. இவ்வாறு காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு பேசுவதும் பிரவீன் சக்கரவர்த்தி பேசுவதும் முற்றிபும் முரணாக உள்ளது. இதன் மூலமே காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பங்கள் இருப்பதாக தெரிவதாக பலர் சொல்கின்றனர். இதுகுறித்தும் தங்கபாலு பேசியுள்ளார்.
குழு அரசியல் அனைத்து கட்சிகளிலும் உள்ளது. குழு அரசியல் இல்லாத கட்சிகளே இல்லை. காங்கிரஸ்கட்சியில் மட்டும் தான் குழு அரசியல் இருப்பதாக சொல்வது நியாயமில்லை. ஒரு குடும்பத்தில் பல முரண்கள் இருக்கும். பல பிரச்சனைகள் இருக்கும். அதுபோல தான் கட்சியிலும். காங்கிரஸ் கட்சிக்குள் பலதரப்பட்ட கருத்துக்கள் பேசப்படும், ஆனால் கடைசியில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்றார் தங்கபாலு.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் திமுக கூட்டணியில் இருந்து அதிகப்படியான தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்திருக்கின்றனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கின்றது. ஆனால் பிரவீன் சக்கரவர்த்தி தலைமையின் அனுமதி பெற்று தான் விஜய்யை சந்தித்தேன் என்கின்றார். மறுபக்கம் தங்கபாலு ,எங்கள் தலைமை விஜய்யை சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்கின்றார். இதில் யார் சொல்வது உண்மை என்பது தான் தற்போதய குழப்பமாக உள்ளது.
இருப்பினும் விஜய்யின் தவெகமற்றும் காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை கண்டிப்பாக நடந்திருப்பதாக இதன் மூலம் தெரிய வருகின்றது. ஆனால் ராகுல் காந்தி விஜய்யுடன் கூட்டணி வைக்க உண்மையிலேயே விருப்பப்பட்டாரா ? என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. ஏனென்றால் இடையில் ராகுல் காந்தி திமுக கூட்டணி குறித்து வருத்தத்தில் இருந்ததாக வதந்திகள் வந்தன. மேலும் எதிர்க்கட்சிகள் கூட, ராகுல் காந்தி தனது பரப்புரையில் முக ஸ்டாலினின் பெயரை குறிப்பிடுவதில்லை என சொல்கின்றனர்.
அதைப்போல முக ஸ்டாலினும் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடவில்லை என்கின்றனர். ஒருவேளை ராகுல் காந்திக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததில் முழு திருப்தி இல்லையோ ? என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்திக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்கின்றார். இவ்வாறு காங்கிரஸ் கட்சிக்குள் இரு குழுக்களாக பிரித்து இருப்பதாக இதன் மூலம் தெரிய வருகின்றது.
ஒருகுழுவினர், காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். மற்றொரு குழு திமுக கூட்டணியில் தொடர விரும்பியுள்ளனர். காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் தவெகவில் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் மற்றும் ஆட்சியிலும் பங்கு உண்டு என விஜய் கூறியதால் அதிக தொகுதிகளை விரும்பிய காங்கிரஸ் கட்சியினர் விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என கூறியிருக்கலாம். இவ்வாறு பல விஷயங்கள் கட்சிக்குள் அரங்கேறி இருந்தாலும் இறுதியில் ராகுல் காந்தி மற்றும் முக ஸ்டாலின் இருவருமே கூட்டணியில் முழு திருப்தியுடன் இருக்கின்றார்களா ? என்பது தான் கேள்வியாக உள்ளது.
