ஜெயிலர் 2 வசூல்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் அக்டோபர் 15ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான ஜெயிலர் 2 படத்தின் வசூல் அமோகமாக இருக்கிறது. டைகர் முத்துவேல் பாண்டியன் சம்பவம் செய்த படம் திரைக்கு வந்த நான்கு நாட்களில் உலக அளவில் ரூ. 424.25 கோடி வசூல் செய்திருக்கிறது என சாக்னிக் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவில் நான்கு நாட்களில் ரூ. 234.25 கோடி கிடைத்திருக்கிறது என மேலும் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஜெயிலர் 2 படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த மாதிரியே நடந்திருக்கிறது.
ஞாயிறு வசூல்: நேற்று இந்தியாவில் 15 ஆயிரத்து 473 காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில் ரூ. 55.85 கோடி வசூல் நடந்திருக்கிறது. வெளிநாடுகளில் நான்காவது நாளில் ரூ. 40 கோடி வசூலித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் இதுவரை வெளிநாடுகளில் ரூ. 190 கோடி வசூல் செய்திருக்கிறது. நான்கு நாட்களில் ரூ. 400 கோடியை தாண்டி வசூலித்திருப்பதால் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலான ரூ. 600 கோடியை அதன் இரண்டாம் பாகம் விரைவில் கடந்துவிடும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
தமிழில் ஆதிக்கம்: ஜெயிலர் 2 திரைக்கு வந்த நாளில் இருந்து தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளை விட தமிழில் தான் அதிகமாக வசூல் செய்து கொண்டிருக்கிறது. நேற்று தமிழில் ரூ. 39.95 கோடியும், தெலுங்கில் ரூ. 9.50 கோடியும், இந்தியில் ரூ. 5.75 கோடியும், கன்னடத்தில் ரூ. 65 லட்சமும் வசூல் வந்திருக்கிறது.
ஜெயிலர் 2 சாதனை: இந்த ஆண்டு இதுவரை ரிலீஸான தமிழ் படங்களில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் தான் அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது. ஹெச். வினோத் இயக்கிய ஜனநாயகன் படம் உலக அளவில் ரூ. 324.68 கோடி வசூல் செய்தது. இதையடுத்து அதிகம் வசூலித்த படமாக இருந்தது நடிப்பின் நாயகன் சூர்யாவின் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு உலக அளவில் ரூ. 310.12 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில் நான்கு நாளில் ஜனநாயகன் வசூலை முந்தி இந்த ஆண்டு அதிகம் வசூலித்த தமிழ் படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது ஜெயிலர் 2.
லியோ சாதனை முறியடிப்பு: ஜனநாயகன் மட்டும் அல்ல விஜய்யின் லியோ பட சாதனையையும் முறியடித்திருக்கிறது ஜெயிலர் 2.அதாவது கேரள மாநிலத்தில் ரிலீஸான அன்றே அதிகம் வசூலித்த தமிழ் படம் என்று ரூ. 12 கோடி வசூலுடன் சாதனை செய்தது லியோ. ஆனால் ஜெயிலர் 2 படமோ ரிலீஸ் நாளில் ரூ. 12.50 கோடி வசூலித்து லியோவின் சாதனையை முறியடித்துவிட்டது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஜெயிலரை முந்தியது: டிக்கெட் முன்பதிவில் ஜெயிலரை விட ஜெயிலர் 2 அதிகம் வசூலித்த நிலையில் முதல் நாள் வசூலிலும் முந்தியது. ஜெயிலர் படம் ஓபனிங் நாளில் உலக அளவில் ரூ. 96.36 கோடி வசூலித்தது. ஆனால் அதன் இரண்டாம் பாகமோ முதல் நாளே உலக அளவில் ரூ. 125.25 கோடி வசூல் செய்துவிட்டது. ஜெயிலர் 2 படத்தின் வசூல் வேட்டை இதே வேகத்தில் தொடர்ந்தால் ரூ. 1000 கோடியை எட்டிய முதல் தமிழ் படம் என்கிற சாதனையை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link
