ரஜினிகாந்துக்கு தேவா போட்ட மியூசிக்: டான்ஸ் ஆட நான் என்ன கமலா மாத்துங்க என்ற தலைவர்

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாணிக்கம் மற்றும் பாட்ஷாவாக நடித்த பாட்ஷா படம் ரிலீஸாகி 31 ஆண்டுகள் ஆனாலும் அதை இன்றும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அந்த மெகா ஹிட் படத்திற்கு மாஸாக இசையமைத்தவர் தேவா.

இன்று தமிழ் மக்கள் ஆயுத பூஜையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நல்ல நாளில் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஆயுத பூஜை வாழ்த்து சொல்ல சமூக வலைதளங்களில் மக்கள் பயன்படுத்துவது ரஜினிகாந்தின் நான் ஆட்டோக்காரன் பாடல் வீடியோவை தான்.

தேவா தகவல்: பாட்ஷா படத்திற்காக உருவாக்கப்பட்ட அந்த பாடல் ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை நாளில் சமூக வலைதளங்களில் வைரலாகிவிடும். இந்நிலையில் நான் ஆட்டோக்காரன் பாடலுக்கு தேவா இசையமைத்த கதையை பார்ப்போமா?. பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் தேவா கூறியதாவது, அண்ணாமலை படத்தில் வந்த வந்தேன்டா பால்காரன் தான் லோக்கலான பாட்டு போன்று உள்ளதே. பாட்ஷாவுக்கு ஆட்டோக்காரன் பாடலை மாடர்னாக செய்யலாமே சார் என நான் சொன்னதும் சுரேஷ் கிருஷ்ணா ஒத்துக் கொண்டார்.

ஆட்டோ ஆட்டோ சூப்பர் ஆட்டோ சொல்லப் போனால் ஒரு நாள் பீச்சுப்பக்கம் போனேன் என ரஜினிகாந்த் சார் சிரிப்பது மாதிரி பாடலை உருவாக்கிவிட்டேன். பாட்டை கேட்ட அவரோ என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்டார். ஏன் சார், பாட்டு நன்றாக இல்லையா என நான் கேட்டேன். நான் என்ன பிரபுதேவாவா, இல்லை கமல் சாரா?. இதுக்கு எல்லாம் என்னால் டான்ஸ் ஆட முடியாது சார். மாத்தி லோக்கலா பாட்டு போடுங்க என்றார் ரஜினிகாந்த். அவர் லோக்கல் என்றதும் நான் ஒரு வார்த்தையை பிடித்தேன்.

தேவா லிரிக்ஸ்: பாட்டுக்கு இசையமைக்கும்போது நானே ஒரு டூப் லிரிக்ஸ் வைத்துவிடுவேன். கப்பல் என்கிற வார்த்தையை பிடித்தேன். கப்பலை விட சிறியது பாய்மரம். அதை டோரா என்பார்கள். அந்த பாய் மரத்திற்கு கீழ் ஒரு ஆயா. அந்த ஆயா கையில் ஒரு குழந்தை. அந்த குழந்தை கையில் ஒரு கிளி. கிளி வாயில் ஒரு பழம். பழத்திற்குள் ஒரு கொட்டை. கொட்டைக்குள் ஒரு புழு. அந்த புழு நெற்றியில் ஒரு பொட்டு.

ஏய் கப்பல் பாரு கப்பல் பாரு. கப்பல் மேல டோரா பாரு. டோரா கீழ ஆயா பாரு, ஆயா கையில கொழந்த பாரு, கொழந்த வாயில் பழத்த பாரு, பழத்துக்குள்ள புழுவ பாரு, புழு நெத்தியில பொட்டு பாருடா. இது தான் முதலில் ஆட்டோக்காரன் பாட்டு லிரிக்ஸ். அதை கேட்டதும் தேவா சார் தேவா சார், சூப்பர் சார்னு உடனே சொன்னார் ரஜினிகாந்த். ஆட்டோக்காரனுக்கும் நான் எழுதிய பாட்டுக்கும் தொடர்பே இல்லைனு சொல்லி வைரமுத்து சாரை அழைத்ததும் அவர் வந்தார்.

வைரமுத்து வரிகள்: வந்த ஐந்தே நிமிடத்தில் ஆட்டோக்காரன் பாட்டுக்கு பல்லவி கொடுத்தார் அவர். அப்புறம் நான் பாடிப் பாடி இப்போ அந்த பாடலை எஸ்.பி.பி. சார் பாடினார். ரஜினிகாந்த் சாருக்கு எஸ்.பி.பி. சார் தான் சரியாக இருப்பார். அவர் பாடி நமக்கு பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதில் சூப்பர் ஸ்டாருக்கு வருத்தமாகிவிட்டது.நான் ஒரு நாள் அவரை பார்க்கச் சென்றபோது, ஆட்டோக்காரன் பாடலை நீங்கள் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் சார் என்றார். நான் பாடியிருந்தால் உங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மக்களுக்கு நன்றாக இருந்திருக்காது என்றேன். மக்களுக்கு எஸ்.பி. பி. தான் என்றார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அந்த சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த தேவா நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து தேவாவின் சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் அரசு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடந்தது.

Source link