சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிடுகிறது. பிரசாரங்களில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தீவிர தேர்தல் ஈடுபட்டு வருகிறார். அவர் பிரசாரத்தில் ஈடுபடும் இடங்களில் கூட்டம் அலைமோதி வருகி வருகிறது. இதனால் த.வெ.க. கட்சி யினர், வேட்பாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இன்று விஜய் காரைக் குடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். நாளை கடலூரிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) விஜய் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கு கவரைப்பேட்டை போலீசார், தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளனர்.
திங்கட்கிழமை மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் பிரசாரம் செய்திட த.வெ.க.சார்பில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு 28 கட்டுபாடுகளுடன் போலீசார் அனுமதி அளித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 4500 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தினர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
