ஜாபர் சாதிக்குக்கு சளைத்தவரல்ல பூபாலன் – காரில் நடக்கும் கடத்தல்கள்: மெத்தாம்பெட்டமைனுடன் சிக்கிய வேறு பொருட்கள் என்னென்ன? – boopalan case compared to jaffer sadiq what else was seized along with crystal methamphetamine

ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.போதைப்பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூற

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் மார்க்கமாகச் சந்தேகத்திற்கிடமான வகையில் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைனை கடத்த முயன்ற விவகாரத்தில் நான்கு பேரை மத்திய வருவாய் குற்றப்பிரிவு மற்றும் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் கைதான திருப்புண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன், தவெகவின் முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. பூபாலன் வீடு உட்பட நான்கிடங்களில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 137 கிலோ மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைனை இலங்கைக்குக் கடத்த முயன்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகியின் கைதுதமிழக அரசியல் களத்தை உலுக்கியிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

அதிகாரிகளுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில்தான் இலங்கைக்குச் சந்தேகப்படும் வகையில் கடலோரக் கடத்தல் நடைபெற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஜாஃபர் சாதிக் vs பூபாலன்

கடந்த 2014 முதல் 24 வரையிலான காலங்களில் திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப் பொருட்களை டிரைவர்கள் மூலம் ஆஸ்திரேலியா மலேசியா உள்ளிட்ட நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தினார். செய்து வெளியாகி மிகப்பெரிய அளவில் திமுக விற்கு எதிரான மனநிலை உருவாக்கியது. சட்டவிரோதமாக கிடைத்த கடத்தல் பணத்தை விச் அண்டு பிளே கேமிங் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத அளவிற்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பூபாலனும் மிகப்பெரிய கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போதைப் பொருளை உணவுப் பொருட்களுடன் சேர்த்து ரயில்கள் மூலம் டெல்லி அனுப்பி அங்கிருந்து ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவுக்கு இந்த போதை பொருட்களை கடத்தி வந்தார். கடத்தல் சம்பவத்திற்கு ஓட்டுநர்களை வெளிநாடுகளை நியமிக்க முயற்சித்தார் மாதம் ரூபாய் 3.5 லட்சம் சம்பளத்தில் ஓட்டுனர்களை நியமித்து இந்த கடத்தல் சம்பவத்தை அடுத்த முயன்றதாக அப்போது அமலாக்கத்துறை கண்டறிந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது பூபாலன் கடத்தல் விவகாரத்திலும் இரண்டு சொகுசு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற ஆபத்தான கெமிக்கல் போதை பொருட்களை கார்களை பயன்படுத்தி கடத்துவது அதிகரித்து வருகிறது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சட்டவிரோதச் சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில், என்னென்ன பொருட்கள் கடத்தப்பட்டிருக்கின்றன என்பது குறித்து பிரஸ் இன்பர்மேஷன் பீரோவில் வெளியான அதிகாரப்பூர்வத் தகவல்கள்: வெள்ளித் தாள்களால் சுற்றப்பட்ட 27 பாக்கெட்டுகளைக் கொண்ட ஆறு டஃபிள் பைகள். ஒவ்வொரு பாக்கெட்டும் சுமார் ஐந்து கிலோ எடை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த ரூ.10 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

போதைப்பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

137 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்

அதோடு, சட்டவிரோதப் புழக்கத்தில் இருந்த அதிக அளவிலான போதைப்பொருட்களை டிஆர்ஐ பறிமுதல் செய்திருக்கிறது. இதன் மூலம் 137 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைனை டிஆர்ஐ பறிமுதல் செய்திருக்கிறது.

கடத்தல் வலையமைப்பைச் சிதைத்த டிஆர்ஐ

அதோடு, கடல் வழியாகப் போதைப்பொருளை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள், அதனைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட போக்குவரத்து, சேமித்து வைப்பதற்கான தளவாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களைக் கொண்ட ஒட்டுமொத்த வலையமைப்பையும் வெற்றிகரமாகச் சிதைத்திருக்கிறது டிஆர்ஐ.

Source link