ஐபிஎல் 2026: ராஜஸ்தானுக்கு எதிராக ஆர்சிபி முதலில் பேட்டிங்

படக்குறிப்பு, கோப்புப் படம்

11 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

2026 ஐபிஎல் சீசனில் இன்று நடக்கும் 16வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி கவுஹாத்தியில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணி இந்த சீசன் தங்களின் 3 ஹோம் ஆட்டங்களை கவுஹாத்தியில் விளையாடுகிறது. ஏற்கெனவே இங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சீசனில் ஆர்சிபி விளையாடும் முதல் போட்டி இது.

இந்த இரு அணிகளுமே இதுவரை இந்த சீசனில் தோற்கவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆர்சிபி விளையாடிய2 போட்டிகளையும் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.

மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இரவு 8.15 மணியளவில் போட்டி தொடங்கவிருந்த நிலையில், டாஸின் போதே மீண்டும் மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் தொடங்குவது மேலும் தாமதமாகிறது.

டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக், “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். இது ஒரு காய்ந்த ஆடுகளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது, இன்றும் கூட சிறிது மழை பெய்தது. அதனால் ஆடுகளத்தில் சற்று ஈரப்பதம் இருக்கும். நாங்கள் அதைச் சாதகமாக்க முயல்வோம், ஆனால் இது ஒரு நல்ல ஆடுகளமாகவே தெரிகிறது. நன்றாக உணர்கிறேன்.

தொடர் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் மிகவும் நேர்த்தியாகச் செயல்பட்டோம் என்று நினைக்கிறேன். “மிகவும் நேர்மையான, தந்திரமான மற்றும் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடும் அணியாக நாம் இருக்க வேண்டும்” என்பதுதான் அணிக்கு நான் சொல்லும் செய்தி. எனவே, முதல் மூன்று போட்டிகளில் செய்தது போலவே, சூழலை கணித்து அதற்கு ஏற்றவாறு விளையாடி, நல்ல புள்ளிகளைப் பெறுவோம் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

காயத்திலிருந்து மீண்டிருக்கும் ஹேசில்வுட் மீண்டும் அணியில் இடம்பிடித்திருப்பது பற்றிப் பேசிய ஆர்சிபி கேப்டன் பட்டிதார், “துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆட்டத்தில் டஃபி இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஹேசில்வுட் விளையாடுகிறார். கடந்த போட்டியில் டஃபி மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். ஆனால் ஹேசில்வுட் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர். அவர் ஒரு தனித்துவமான பௌலர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருடைய வருகை நிச்சயமாக எங்களுக்கு ஒரு நல்ல மனநிலையைத் தரும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

பிளேயிங் லெவனில் யார்?

ராஜஸ்தான் ராயல்ஸ்

பிளேயிங் லெவன்: யஷஷ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரன் ஹிட்மெயர், ரவீந்திர ஜடேஜா, டானவன் ஃபெரீரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னாய், நாந்த்ரே பர்கர், பிரிஜேஷ் பட்டேல், சந்தீப் ஷர்மா

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: லுவான் ட்ரே பிரிடோரியஸ், ரவி சிங், ஷுபம் துபே, துஷார் தேஷ்பாண்டே, வைபவ் சூர்யவன்ஷி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பிளேயிங் லெவன்: ஃபில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜாஷ் ஹேசில்வுட், அபினந்தன் சிங்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: ரசிக் தார், வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் பெதெல், கனிஷ்க் சௌஹான், சுயாஷ் ஷர்மா

இந்த சீசனில் இதுவரை

இந்தப் போட்டிக்கு முன்பாக விளையாடிய 3 போட்டிகளிலுமே ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்கும் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளை வீழ்த்தியிருக்கிறது. 2 போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கும் அந்த அணி, ராயல்ஸை விட சிறந்த ரன்ரேட் கொண்டிருப்பதால், இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேற முடியும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link