ஐப்பசி மாதம் ஆன்மீக ரீதியாக பாவங்களை போக்கி, புண்ணியங்களை அதிகம் அள்ளித் தரும் மாதமாக கருதப்படுகிறது. பண்டிகைகள் மட்டுமின்றி முக்கிய விரத நாட்கள் பலவற்றையும் உள்ளடக்கியது ஐப்பசி மாதம். இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தின் எந்த தேதியில் என்ன விசேஷம் மற்றும் விரத நாட்கள் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாத ஆன்மீக சிறப்புகள் :
தமிழ் மாதங்களில் 7வது மாதமாக வரும் ஐப்பசி மாதம் ஆன்மீக ரீதியாக சிறப்புமிக்க மாதமாக கருதப்படுகிறது. சூரியன், கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு தனது பயணத்தை மாற்றும் மாதமாகும். அதனால் இதை துலாம் மாதம் என்றும் சொல்லுவது உண்டு. இந்த மாதத்தில் துலா ஸ்நானம் எனப்படும் காவிரி நீராடல் மிகவும் சிறப்புமிக்கதாகும். அதாவது, ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் காவிரியில் ஐக்கியமாவதாக ஐதீகம். ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் புனித நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. அப்படி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள் ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் காவிரியில் புனித நீராடலாம். இதற்கு கடைமுழுக்கு அல்லது கடைமுகம் என்று பெயர்.
ஐப்பசி மாதத்தில் தீபாவளி, கந்தசஷ்டி விரதம் என பல முக்கிய பண்டிகைகள் வந்தாலும், இந்த மாதத்தில் வரும் பெளர்ணமியில் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேகம் மிக முக்கியமான உற்சவமாக ஆன்மீக அன்பர்களால் பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ஏகாதசிகள் பாவங்கள், வறுமையை போக்கக் கூடியது என்பது இந்த மாதத்தில் மகாலட்சுமியையும், மகாவிஷ்ணுவையும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
ஐப்பசி மாதம் 2026 விசேஷங்கள் :
ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை விசேஷங்கள் அக்டோபர் 18 ஐப்பசி 01 ஞாயிறு துர்காஷ்டமி அக்டோபர் 19 ஐப்பசி 02 திங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை அக்டோபர் 20 ஐப்பசி 03 செவ்வாய் விஜயதசமி அக்டோபர் 22 ஐப்பசி 05 வியாழன் ராஜராஜ சோழன் சதய விழா அக்டோபர் 25 ஐப்பசி 08 ஞாயிறு அன்னாபிஷேக பெருவிழா நவம்பர் 08 ஐப்பசி 22 ஞாயிறு தீபாவளி, கேதார கெளரி விரதம் நவம்பர் 10 ஐப்பசி 24 செவ்வாய் கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் நவம்பர் 15 ஐப்பசி 29 ஞாயிறு கந்தசஷ்டி நிறைவு சூரசம்ஹாரம் விழா
ஐப்பசி மாதம் 2026 விரத நாட்கள் :
விரதங்கள் ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை அமாவாசை நவம்பர் 08 ஐப்பசி 22 ஞாயிறு பெளர்ணமி அக்டோபர் 25 ஐப்பசி 08 ஞாயிறு கிருத்திகை அக்டோபர் 27 ஐப்பசி 10 செவ்வாய் திருவோணம் அக்டோபர் 19 ஐப்பசி 02 திங்கள் ஏகாதசி அக்டோபர் 22,நவம்பர் 05 ஐப்பசி 05,ஐப்பசி 19 வியாழன்,வியாழன் சஷ்டி அக்டோபர் 31,நவம்பர் 15 ஐப்பசி 14,ஐப்பசி 29 சனி,ஞாயிறு சங்கடஹர சதுர்த்தி அக்டோபர் 29 ஐப்பசி 12 வியாழன் சிவராத்திரி நவம்பர் 07 ஐப்பசி 21 சனி பிரதோஷம் அக்டோபர் 23,நவம்பர் 06 ஐப்பசி 06,ஐப்பசி 20 வெள்ளி,வெள்ளி சதுர்த்தி நவம்பர் 13 ஐப்பசி 27 வெள்ளி
ஐப்பசி மாதம் 2026 சுப முகூர்த்த நாட்கள் :
ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை முகூர்த்தம் அக்டோபர் 25 ஐப்பசி 08 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம் அக்டோபர் 30 ஐப்பசி 13 வெள்ளி தேய்பிறை முகூர்த்தம் நவம்பர் 01 ஐப்பசி 15 ஞாயிறு தேய்பிறை முகூர்த்தம் நவம்பர் 11 ஐப்பசி 25 புதன் வளர்பிறை முகூர்த்தம் நவம்பர் 13 ஐப்பசி 27 வெள்ளி வளர்பிறை முகூர்த்தம் நவம்பர் 15 ஐப்பசி 29 ஞாயிறு வளர்பிறை முகூர்த்தம் நவம்பர் 16 ஐப்பசி 30 திங்கள் வளர்பிறை முகூர்த்தம்
ஐப்பசி மாதம் 2026 அஷ்டமி, நவமி, கரி நாட்கள்:
திதி ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை அஷ்டமி அக்டோபர் 18,நவம்பர் 02 ஐப்பசி 01,ஐப்பசி 16 ஞாயிறு, திங்கள் நவமி அக்டோபர் 19,நவம்பர் 03 ஐப்பசி 02,ஐப்பசி 17 திங்கள், செவ்வாய் கரி நாட்கள் அக்டோபர் 23,நவம்பர் 06 ஐப்பசி 06,ஐப்பசி 20 வெள்ளி,வெள்ளி
ஐப்பசி மாதம் 2026 வாஸ்து நாள் மற்றும் நேரம் :
ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை வாஸ்து நல்ல நேரம் அக்டோபர் 28 ஐப்பசி 11 புதன் காலை 07.44 – 08.20
Source link
