TTF Vasan: பிக் பாஸில் ரகளை: சாப்பாட்டை பதுக்கிய வாசன், காட்டு கத்து கத்திய லட்சுமி ப்ரியா

டாஸ்க்கில் சண்டை: பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களை ஊதா கலரு அணி, சிவப்பு கலரு அணி என இரண்டு அணிகளாக பிரித்திருக்கிறார்கள். சும்மாவே சண்டைக்கு பஞ்சம் இருக்காது. இதில் பிக் பாஸ் வீட்டை இரண்டாக பிரித்தாலும் பிரித்தார்கள் இரண்டு அணியினர் மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் சாப்பாட்டு விஷயத்தை தன் சேட்டையை காட்டிவிட்டார் டிடிஎஃப் வாசன். நாம் பிளேட்டிலேயே சாப்பாட்டை சேவ் பண்ணிக்கலாம் என தன்னை போன்றே சிவப்பு அணியை சேர்ந்த தன்யாவிடம் வாசன் கூறிய ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

வாசன் அடாவடி: தட்டு நிறைய சோறு போட்டு அதை எடுத்துக் கொண்டு வாசன் கிளம்பியதை பார்த்த அடாவடி அன்சரும், லட்சுமி ப்ரியாவும், சாப்பாட்டை எங்கே எடுத்துக் கொண்டு போகிறீர்கள் என கேட்டார்கள். எனக்கு தேவை நான் எடுத்து வைக்கிறேன் என வாசன் சொல்ல அய்யய்யோ மறுபடியும் பிரச்சனையை ஆரம்பிக்கிறாங்களே என அன்சர் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார். என்னங்கணா இது என லட்சுமி ப்ரியா ஒரு பக்கம் கேட்க, யார் பேச்சையும் நான் கேட்பதாக இல்லை என்று சாப்பாட்டுடன் நடையை கட்டினார் டிடிஎஃப் வாசன்.

லட்சுமி ப்ரியா ஆவேசம்: உனக்கு மட்டும் தான் சாப்பாட்டை எடுக்கத் தெரியுமா, நானும் செய்வேன்ல என வாசன் மாதிரியே கூடுதலாக சோறை எடுத்தார் லட்சுமி ப்ரியா. ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு, அவனை வைக்கச் சொல்லு நானும் வைக்கிறேன் என பன்ச் வசனம் எல்லாம் பேசினார். இந்த ரகளைக்கு இடையே தான் எடுத்த தட்டுச் சோறை பத்திரமாக ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டார் வாசன். ஆனாலும் லட்சுமி ப்ரியா அவரை சும்மா விடுவதாக இல்லை. அதிலும் சாப்பாடு என்று வந்துவிட்டால் லட்சுமி ப்ரியா நிச்சயம் கேள்வி கேட்பார் என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.

அவன் எடுத்தது தப்பு என்று தெரிந்தும் கூட எல்லோரும் அமைதியாக இருந்தீங்களே. அப்பொழுது பேச வேண்டியது தானே. எனக்கு இவ்ளோ சாப்பாடு தான் வேண்டும். ஆனால் வாசன் மொத்தத்தையும் தூக்கிக் கொண்டு வந்ததால் நானும் தூக்கிட்டு வந்தேன். அவ்ளோ தான்.வேறு ஒரு காரணமும் இல்லை என ஊதா அணியை சேர்ந்த லட்சுமி ப்ரியா பொங்கு பொங்கு என பொங்கியிருக்கிறார்.

பிக் பாஸ் சம்பவம்:சும்மாவே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இந்நிலையில் வீட்டில் ஒரு கோட்டை போட்டு இது வெறும் கோடு கிடையாது இரண்டு அணிகளுக்கு இடையேயான போரின் தொடக்கம் என்று வேறு ஏத்திவிட்டிருக்கிறார். போர் என்று வந்துவிட்டால் ஈவு இரக்கம் எல்லாம் பார்க்க முடியாது. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது மட்டுமே முக்கியம் என இரண்டு அணியினரும் மோத ஆரம்பித்துவிட்டார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

ஒரு கவருக்காக அக்ஷிதாவும், அஷ்மிதாவும் மோதிக் கொண்டதை ஹெட்செட் போட்டு கேட்டவர்களுக்கு தலைவலியே வந்துவிட்டது. இந்நிலையில் லட்சுமி ப்ரியா வேறு கத்தியிருக்கிறார். அந்த வீட்டுக்கு சோறு சாப்பிடத் தான் போனீங்களாமா லட்சுமி ப்ரியா?. எப்பொழுது பார்த்தாலும் சோத்துக்கு சண்டை போடுகிறீர்களே என பார்வையாளர்கள் கேட்டிருக்கிறார்கள். வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி பேசும்போது வாசனுக்கு ஆடியன்ஸ் கை தட்டுவதை நோட் செய்த லட்சுமி ப்ரியா, அவருடன் கை கோர்ப்பார் என்று பார்த்தால் மோதிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே நேற்று வெளியே சென்ற ராகவுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடக்க பிரார்த்தனை செய்கிறார்கள் ரசிகர்கள்.

Source link