Ranji Trophy 2026 – 517 பந்தில் 400* அடித்த மும்பை பேட்டர்: ஆனா, இது செல்லாது? காரணம் இதுதான் – chinmay sutar scored 400 runs in 517 balls in ranji trophy 2026 for mizoram team

ரஞ்சிக் கோப்பை 2026 தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், எலைட் குரூப்பில், முக்கிய அணிகள் விளையாடும் நிலையில், பிளேட் குரூப்பில் மேகாலயா, மணிப்பூர், நாகாராந்து, மிசோரம், அருணாச்சல பிரதேசம், சிக்கம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த பிளேட் குரூப்பில், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய அணிகள் தீமாபூரில் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற நாகாலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மிசோரம் இன்னிங்ஸ்: இதில், முதலில் களமிறங்கிய மிசோரம் அணியில், மற்ற பேட்டர்கள் சொதப்பிய நிலையில், மூன்றாவது இடத்தில் ஆடிய சின்மை சுடர், ஒருபக்கம் நிலைத்து நின்று விளையாடி, ரன்களை குவிக்க ஆரம்பித்தார். 100, 200, 300 என ரன்களை குவித்து ஆடியதால், இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சின்மை சுடர், 517 பந்துகளில் 46 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 400 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.

400 ரன்களை குவித்த உடனே, மிசோரம் அணி, 581/9 ரன்களுக்கு டிக்ளேர் அறிவித்தது.

ரஞ்சிக் கோப்பை வரலாற்றில், ஒரு பேட்டர் 400 ரன்களை அடிப்பது, இதுதான் 2ஆவது முறை. இதற்குமுன், 1948-49ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அணியை சேர்ந்த நம்பல்கர், கத்தியவார் அணிக்கு எதிராக 443* ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். அதன்பிறகு, தற்போதுதான், ஒரு பேட்டர், ரஞ்சிக் கோப்பையில் 400* ரன்களை அடித்து வரலாறு படைத்துள்ளார்.

இது செல்லாது? இந்நிலையில், சின்மை சுடர் அடித்த ரன்களை, பிசிசிஐ பெரியதாக எடுத்துக் கொள்ளாது என்பது தெரிய வந்துள்ளது. ரஞ்சிக் கோப்பை தொடரில், பிளேட் பிரிவில் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மிசோரம், நாகாலாந்து, மேகாலமா, மணிப்பூர் போன்ற மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர், இப்படி பெரிய ஸ்கோரை அடித்தால்தான், பிசிசிஐ அதனை அங்கீகரிக்கும்.

இந்த மாநிலங்களை சேராத வீரர்கள், பிளேட் குரூப்பில் இடம்பெற்று, கத்துக்குட்டி பௌலருக்கு எதிராக பெரிய ரன்களை அடித்தால், அதனை பிசிசிஐ பெரியதாக கண்டுகொள்ளாதாம். இதனால்தான், கருண் நாயர் போன்ற வீரர்கள், தங்களது மாநில அணியில் இருந்து விலகினாலும், எலைட் குரூப் அணியில்தான் இணைந்தனர்.

ஆகையால், மும்பை அணிக்காக ஆடிவிட்டு, பிறகு மிசோரம் அணிக்காக விளையாடும் சின்மை சுடர் அடித்த 400* ரன்களை, பிசிசிஐ பெரியதாக எடுத்துக் கொள்ளாது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்கோர் விபரம்: சின்மை சுடர், 400 ரன்களை அடித்த நிலையில், அடுத்து, ஜெகு ஆண்டர்சன் 69 (151) மட்டுமே பெரிய ரன்களை அடித்தார். மற்ற எந்த பேட்டரும் 35 ரன்களை கூட தாண்டவில்லை. இறுதியில், மிசோரம் அணி, 154.1 ஓவர்களில் 581/9 ரன்களை குவித்து டிக்ளேர் அறிவித்தது.

தற்போது, இந்த பிளேட் குரூப்பில் அபாரமாக செயல்பட்டு, முதல் இடத்தை பிடிக்கும் அணி, அடுத்த வருடம், பெரிய அணிகள் விளையாடும் எலைட் குரூப்பிற்கு சென்றுவிடும். அதேபோல், எலைட் குரூப்பில் கடைசி இடத்தை பிடிக்கும் அணி, அடுத்த வருடம் பிளேட் குரூப்பிற்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link