அதிமுகவை விட்டு வந்த மாஜிக்களுக்கள் அதிருப்தி. தவெகவில் வைத்த செக்- விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் நிலைமையா? – tvk plans board chairman posts for former aiadmk mlas vijay tvk strategy for five tamil nadu by-elections

2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றார். இருப்பினும் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எடுத்த உட்கட்சி மோதல்

இதற்கு இடையே அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எடுத்த உட்கட்சி மோதல் காரணமாக மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா, சி விஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து உள்ளனர்.இதனால் தமிழகத்தில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கட்சித் தாவல் நடவடிக்கை காரணமாக அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகள் தனி தொகுதி என்பதால் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தவெகவில் இணைந்த அதிமுக மாஜிகள்

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மரகதம் குமரவேலும், சத்யபாமாவும் தமிழக வெற்றி கழகம் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் ராஜினாமா செய்தவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தில் மீண்டும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டதால் தேர்தல் பிரச்சாரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

குறிப்பாக சட்டசபைத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் செல்லாத விஜய், இரண்டு தொகுதிகளுக்கு தலா இரண்டு நாட்கள் வீதம் நான்கு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் கிராமம் கிராமமாக சென்று மக்களோடு மக்களாக களத்தில் நின்று முருங்கைக்காய் பறிப்பது, டிராக்டர் ஓட்டுவது, டீ குடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியது. இருப்பினும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றாலும் அது திருப்திகரமாக இல்லை.

ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் சீட் வழங்காலாமா?

சுமாராக ஒவ்வொரு தொகுதிக்கும் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விஜய் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் வெறும் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளது தவெக. மறுபுறம் சட்டசபை தேர்தலில் மூன்றாம் இடத்திலிருந்து திமுக 31% வாக்குகளுடன் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. திமுகவின் வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது.

இது மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கு திமுகவை இன்னும் வேகத்துடன் போட்டியிடும் உத்வேகத்தை அளித்துள்ளது. இப்படியான சூழலில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழலில் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் சீட் வழங்காலாமா என்பது குறித்து தவெக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் தவெக வியூகம்

அதேசமயம், மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பளித்தால் சொந்தக் கட்சியிலேயே கூட நெருக்கடி ஏற்படலாம் என்பதால் இப்போதைக்கு விலகி வந்தவர்களுக்கு வாரியத் தலைவர் பதவியை அளிக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது அதிமுகவிலிருந்து தாவி வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கரும், எம்ஆர் விஜயபாஸ்கரும் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் உள்ளனர். அவர்களைத் தற்போது சமாதானம் செய்யும் நடவடிக்கையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த சமாதானத்தை இரு விஜயபாஸ்கர்களும் ஏற்பார்களா என்று தெரியவில்லை. அப்படி ஒரு வேளை அவர்கள் ஏற்காவிட்டால், அவர்களுக்கு எம்.பி சீட் கொடுக்க தவெக தலைமை முன்வரலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஏதாவது செய்து சமாளித்து விட்டு, வருகிற இடைத் தேர்தலில் தவெகவினரை நிற்க வைத்து வெல்ல வைக்க விஜய் தரப்பு முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.

Source link