இதற்கு தற்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கின்றார். இதுகுறித்து அவர் பேசியது, எதிர்க்கட்சிகள் கட்டுக்கதை சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். இதைப்போல தான் 2021 ஆம் ஆண்டும் எனக்கு முதல்வராகும் தகுதி இல்லை என சொன்னார்கள். கட்டம் சரியில்லை என்றார்கள். ஆனால் நான் யோகத்தை நம்பி இருப்பவன் கிடையாது. அதிர்ஷ்டமில்லை என புலம்புபவன் நான் இல்லை. உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவன் நான்..
கலைஞரிடம் உழைப்பை கற்றுக்கொண்டவன் நான். எனவே தான் அதையெல்லாம் நான் உடைத்து முதல்வரானேன். அதைப்போல தற்போது திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியமைத்ததில்லை என்கின்றனர். திமுகவில் இதுவரை யாரும் தொடர்ந்து இருமுறை முதல்வரானதில்லை என சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். எப்படி 2021 ஆம் ஆண்டு எனக்கு முதல்வராகும் தகுதியில்லை, கட்டம் சரியில்லை என சொன்னார்களோ அதுபோல இப்பொது திமுக தொடர்ந்து இருமுறை ஆட்சியமைத்ததில்லை என்கின்றனர்.
எனவே 2021 ஆம் ஆண்டு இந்த மூடநம்பிக்கை எல்லாம் உடைத்து திமுக ஆட்சி அமைந்ததோ அதுபோல 2026 தேர்தலிலும் கடந்தமுறையை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என உறுதியாக கூறினார் முக ஸ்டாலின். இவ்வாறு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முக ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே போதும் எங்களின் வெற்றியை உறுதி செய்துவிட்டது என பெருமையாக பேசினார் முக ஸ்டாலின்.
தேர்தல் வாக்குறுதிகளை சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு, சூப்பர்ஸ்டாரை இறக்கிட்டோம், வெற்றி மேலும் உறுதியாகிவிட்டது என்றார் முக ஸ்டாலின். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்கு முக ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கின்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை பேச்சு சர்ச்சையானது. இதுகுறித்தும் முக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.
இதைப்பற்றி அவர் பேசுகையில், மரணம் அனைவருக்கும் ஒருநாள் வரும். ஆனால் நாங்கள் கொடுத்த திட்டங்கள் மறையவே மறையாது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்றார் முக ஸ்டாலின். கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமியின் சர்ச்சை பேச்சு குறித்து பல கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலினும் அடுத்தடுத்து பதிலடி கொடுத்து வருகின்றார்.
இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிமுக ஸ்டாலின் குறித்து பேசியது மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருப்பதாகவே தெரிகின்றது. அவரின் சர்ச்சை பேச்சு திமுகவிற்கு சாதகமாக மேலும் அமைந்திருப்பதாக பலர் தங்களின் கருத்தை கூறி வருகின்றனர். தற்போது முக ஸ்டாலினின் நம்பிக்கையும் மேலும் அதிகரித்துவிட்டது என்றே தான் சொல்லவேண்டும். முன்பு 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என கூறி வந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறுவது உறுதி என நம்பிக்கையாக கூறி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
