இந்தியாவில் 16-வது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் கடந்த 1-ந்தேதி தொடங்கியது.1931-க்கு பிறகு முழுமையான சாதி வாரியான விவரங்களை உள்ளடக்கிய முதல் கணக்கெடுப்பாகவும், இந்தியாவின் முதலாவது முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகவும் இது நடக்க உள்ளது.
இந்நிலையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரியும் ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களுக்கு பொருளாதார சலுகைகளை வழங்குவதற்கான கொள்கைகளை வகுக்ககோரியும் பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது கோபமடைந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, “நீங்கள் கண்ணியமற்ற மொழியை பயன்படுத்தி உள்ளீர்கள். உங்கள் மனுவில் இத்தகைய மொழி நடையை எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? என கூறி தள்ளுபடி செய்தது.
