இந்தியாவின் அண்டை நாட்டில் வாழ்வதே ஒரு சவால்..உலகின் மிக மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடு – எது தெரியுமா? – do you know which is the unhappiest country in the world

உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடு இன்று உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உலகில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு எதோ ஒரு விதத்தில் துன்பங்கள் மற்றும் நெருக்கடிகள் இருக்கும். இது எப்போது தான் நீங்கும் என்று பலரது கேள்வியாக உள்ளது. மறுப்புறம், போரால் சில நாடுகள் அவதிப்பட்டு வருகிறது. இதனால், இருப்பிடம் , உடை, உணவை இழந் து வருகின்றனர். மறுப்புறம் பல்வேறு உலக நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டில் நாட்டின் நிலைமை பல வளர்ந்து வரும் நாடுகளை விடவும், வளர்ச்சியற்ற நாடுகளை விடவும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

உலக நாடுகள் வாழ்க்கை தரம்

ஒரு நாட்டின் மகிழ்ச்சி நிலையை அதன் உள்நாட்டு உற்பத்தி மற்றும் சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம், போர் இல்லாத சூழல் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உலகின் மகிழ்ச்சி அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இது குறித்து வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட் அறிக்கையின்படி ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான்

இந்த பட்டியலில் கீழ் வரிசையில் உள்ள நாடுகள் தினமும் போராட்டங்கள் மற்றும் போரால் இன்றுவரையும் அவதிப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள மக்களின் தனிப்பட்ட சுதந்திரமும் சமூக ஆதரவும் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் மற்றும் உளவியல் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிப்பு

இதனால், அந்த நாட்டில் உலகளாவிய அளவில் மன அழுத்தம் மற்றும் உளவியல் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் லெபனான் உள்ளது.லெபனானில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் போராடும் நிலைக்கு உருவாக்கியுள்ளன.

3 வது இடத்தில் சிரியா மற்றும் லியோன்

இதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சிரியா மற்றும் லியோன் போன்ற நாடுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது மேலும் இந்த பட்டியலில் பல ஆப்பிரிக்க நாடுகளில் போர் மற்றும் உள்நாட்டு பிரச்சினை காரணமாக மக்களின் பாதுகாப்பு சவாலாகவே உள்ளது குறிப்பாக வன்முறை பசி பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் மக்களின் வாழ்க்கை தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக காங்கோ ஜனநாயக குடியரசு ஜிம்பாவை போன்று நாடுகளிலும் அரசியல் சரியான கட்டமைப்பு இல்லாததன் காரணமாகவும், பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும் அங்கு மக்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக பாதித்துள்ளது.

சர்வதேச உதவிகளும் மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல்

மேலும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் பட்டியலில் இடம் பிடித்த இந்த நாடுகளில் ஊழல் அதிகரிப்பு போர் பதற்றம் உள்நாட்டு பிரச்சனை உள்ளிடவைகள் காரணமாக சர்வதேச உதவிகளும் மக்களுக்கு சரியாக சென்றடைவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் உலகம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது இந்த பகுதிகளில் மக்கள் இன்னும் கடுமையான துன்பங்களை சந்தித்து வருகின்றன மேலும் ஒரு நாள் வாழ்க்கையை வாழ்வதற்கே சவாலாக உள்ளது.