அனிருத், காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்களில் கிரீஸ்செல்லும் நான்கு குடும்பங்கள் – kavya maran, anirudh wedding guests, travel plans are out

கிரீஸில் நடக்கவிருக்கும் அனிருத் ரவிச்சந்தர், காவ்யா மாறனின் திருமணத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து நான்கு குடும்பங்கள் நான்கு தனி விமானங்களில் பயணம் செய்யவிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

வெளிநாட்டில் நடக்கும் அனிருத், காவ்யாவின் திருமணத்தில் குடும்பத்தார் தான் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் பயண விபரம் வெளியாகியிருக்கிறது.

அனிருத் கல்யாண ஏற்பாடு

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும், எஸ்.ஆர்.ஹெச். அணி உரிமையாளர் காவ்யா மாறனும் காதலிக்கிறார்களாம் என ஜெயிலர் படம் ரிலீஸ் நேரத்தில் இருந்து பேச்சாக இருந்தது. இந்நிலையில் அவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்று திருமணம் செய்து வைக்கவிருக்கிறார்கள். இந்தியாவில் அல்ல மாறாக கிரிஸில் நடக்கும் திருமணத்தில் அனிருத் குடும்பத்தார், கலாநிதி மாறன் குடும்பத்தார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் குடும்பம் கலந்து கொள்ளவிருக்கிறது. இது போக நண்பர்கள் ஒரு சிலரும் கிரீஸுக்கு கிளம்புகிறார்கள்.

விமான புக்கிங்

மாறன், ஸ்டாலின், அனிருத் மற்றும் ரஜினிகாந்த் குடும்பத்தார் பயணம் செய்ய நான்கு தனி விமானங்கள் புக் செய்யப்பட்டிருக்கிறது. விமானம், தங்கும் இடம், உணவு என அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் மணமகளின் தந்தையான கலாநிதி மாறன். கிரீஸ் திருமணத்தை அடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இந்நிலையில் மூன்று இடங்களில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதில் சன் குழுமத்தில் வேலை செய்பவர்களுக்காக ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என வலைப்பேச்சு தெரிவித்திருக்கிறது.

ஜெயிலர், ஜெயிலர் 2

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா மேடையில் அனிருத் பாடி ஆடியதை பார்த்து அரங்கில் இருந்த காவ்யா மாறனும் பாடினார். அதை பார்த்து தான் அவர்களுக்கு இடையே காதல் என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் ஜெயிலர் 2 படம் ரிலீஸான கையோடு அனிருத் தன் காதலியான காவ்யா மாறனை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அனிருத் இசையில் வெளியான ஜெயிலர் 2 படத்தின் பி.ஜி.எம்.மை அனைவரும் பாராட்டுகிறார்கள். தலைவர் படம் என்றால் அனிருத் இன்னும் தீயாக வேலை செய்வார்.

ஜோதிடர் கணிப்பு
தலைவர் சினிமா வாழ்க்கை
சென்னை பெண் காவ்யா

Source link