8ஆவது ஊதியக் குழு வுக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல்வேறு ஊழியர் அமைப்புகள் 8ஆவது ஊதியக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்களைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. பல மத்திய அரசு ஊழியர் அமைப்புகள் 3.833 என்ற ஃபிட்மெண்ட் காரணிக்கான கோரிக்கையை எழுப்பியுள்ளன. இந்த ஃபிட்மெண்ட் காரணிக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டவுடன், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயில் இருந்து ரூ. 69,000 ஆக உயரும். இது நிலை 1 ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமாக இருந்தால் அதற்கு மேல் உள்ள ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும். இந்த விவகாரத்தில் ஊதியக் குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது ஊழியர் அமைப்புகளின் ஒரு முன்மொழிவு மட்டுமே.
தொழிலாளர் அமைப்புகளின் கோரிக்கை!
என்சி-ஜேசிஎம்: தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பு 3.833 ஃபிட்மெண்ட் காரணிக்கான கோரிக்கையை எழுப்பியுள்ளது. இது அடிப்படை ஊதியத்தை ரூ. 69,000 ஆக உயர்த்தும்.
ஏஐடிஇஎஃப்: அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு இதே கோரிக்கையை எழுப்பியுள்ளது.
எஃப்என்பிஓ: தேசிய அஞ்சல் அமைப்புகளின் கூட்டமைப்பும் 3.833 ஃபிட்மெண்ட் காரணிக்கான கோரிக்கையை எழுப்பியுள்ளது.
பிபிஎஸ்: பாரத் பென்ஷனர் சமாஜ் அமைப்பு அடிப்படை ஊதியத்தை ரூ. 69,000 ஆக உயர்த்த கோரிக்கை வைத்துள்ளது.
ஐஆர்டிஎஸ்ஏ: இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் 2.92, 3.50, 3.80, 4.09 மற்றும் 4.38 ஆகிய ஃபிட்மென்ட் காரணிகளுக்கான கோரிக்கையை வைத்துள்ளது.
ஃபிட்மென்ட் காரணி என்றால்?
எந்தவொரு ஊதியக் குழுவின் அடிப்படைச் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய அல்லது அதிகரிக்க ஒரு பெருக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பெருக்கி ஃபிட்மென்ட் காரணி என்று அழைக்கப்படுகிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகள் ஃபிட்மென்ட் காரணியைச் சார்ந்துள்ளன. ஃபிட்மென்ட் காரணி அதிகமாக இருந்தால், சம்பளமும் அதிகமாக உயரும்.
சூத்திரம்: தற்போதைய அடிப்படை ஊதியம் x ஃபிட்மென்ட் காரணி = புதிய அடிப்படை ஊதியம்.
உதாரணமாக, 7ஆவது ஊதியக் குழுவின் நிலை 1-ல் உள்ள ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் 18,000 ரூபாய் ஆகும். 3.833 என்ற ஃபிட்மெண்ட் காரணி பயன்படுத்தப்பட்டால், கணக்கீடு பின்வருமாறு இருக்கும்:
18,000 × 3.833 = ரூ. 68,994
அந்த ஊழியரின் புதிய அடிப்படைச் சம்பளம் சுமார் 69,000 ரூபாயாக இருக்கலாம். இருப்பினும், உண்மையான சம்பளம் 8ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அரசின் இறுதி முடிவைப் பொறுத்தே இருக்கும்.
ஃபிட்மெண்ட் காரணி 3.83 ஆக இருந்தால் சம்பளம் எப்படி இருக்கும்?
இந்த நிலையில், நிலை 1 ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயில் இருந்து சுமார் 68,994 ரூபாயாக அதிகரிக்கும்.
அதனைத் தொடர்ந்து, நிலை 2 ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 19,900 ரூபாயில் இருந்து சுமார் 76,277 ரூபாயாக அதிகரிக்கலாம்.
நிலை 3 ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 21,700 ரூபாயில் இருந்து சுமார் 83,176 ரூபாயாக அதிகரிக்கலாம்.
நிலை 4 ஊழியர்களின் சம்பளம் 25,500 ரூபாயில் இருந்து ரூ. 97,742 வரை அதிகரிக்கலாம்.
நிலை 5 ஊழியர்களின் சம்பளம் 29,200 ரூபாயில் இருந்து ரூ. 1,11,924 வரை அதிகரிக்கலாம்.
