விஷ்வக் சென் இயக்கி, நடித்துள்ள “கல்ட்” படத்தின் டிரெய்லர் வெளியானது

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விஷ்வக் சென் இயக்கி, நடித்துள்ள ‘கல்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

விஷ்வக் சென் இயக்கி நடித்துள்ள ‘கல்ட்’ திரைப்படத்தில் காயத்ரி பரத்வாஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். முரளி சர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், தாரக் பொன்னப்பா மற்றும் பிரக்ஞா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர், இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் தருண் பாஸ்கர் ‘கல்ட்’ படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார் . சந்தீப் ககரலா இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘அனிமல்’ படத்திற்கு ஒலி வடிவமைப்பாளராகப் பணியாற்றிய சச்சின், ‘கல்ட்’படத்திற்கும் ஒலி வடிவமைப்பை செய்துள்ளார் .

விஷ்வக் சென் இயக்கி நடித்துள்ள ‘கல்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு நிறைவு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. தனது முந்தைய வெற்றிப் படங்களைப் போல விறுவிறுப்பான மற்றும் அதிரடியான பாணியில் விஷ்வக் சென் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி அமைப்புகள் மிகவும் புதுமையாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் 30 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தற்போதைய ஜென் Z தலைமுறை பார்வையாளர்களை வலுவாக ஈர்க்கும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

டிரெய்லர் வெளியீடு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் விஷ்வக் சென் இயக்கி, நடித்துள்ள ‘கல்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.



Source link