Sun Saturn Astrological Effects,ஐப்பசி மாத சூரியன்–சனி ஷடாஷ்டக யோகம்: சாதகமான பலன்களைப் பெற வாய்ப்புள்ள ராசிகள் – sun saturn shadashtak yoga during aippasi 2026: zodiac signs that may experience positive outcomes

தற்போது மீன ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்து வரக்கூடிய நிலையில், சூரியன் அக்டோபர் 17ஆம் தேதி கடக ராசியில் இருந்து துலாம் ராசியில் நுழைந்துள்ளார். இரண்டும் எதிரெதிர் கிரகங்கள் ஆகும். இவை ஆறுக்கு எட்டு ஸ்தானங்களில் அமைவதால் பொதுவாக சாதகமாக கருதப்படுவதில்லை. இருப்பினும் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த கிரக நிலை மங்களகரமானதாக அமைய உள்ளது.

நவகிரகங்களின் தலைவனான சூரியன் மற்றும் கர்ம பலன்களை வழங்கக்கூடிய சனியும் சடாஷ்டக நிலையில் இணைவதால் உருவாகக்கூடிய ‘ஷடாஷ்டக யோகம்’ சில ராசி அன்பர்களுக்கு தங்களுடைய தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், செல்வ செழிப்பையும் தரக்கூடியதாக அமைய உள்ளது, இந்த நிலை அக்டோபர் 17 முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை நடக்கும் ஐப்பசி மாத காலத்தில் அற்புத பலனை தரக்கூடியதாக அமைய உள்ளது. எந்தெந்த ராசிகள் இதன் மூலம் நல்ல பலன் அடைவார்கள் என தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்களுக்கு கர்ம பலன்களை வழங்கக்கூடியவரான சனிக்கும், நவகிரக அரசன் சூரியனுக்கும் இடையே உருவாகும் சடாஷ்டக யோகம் உங்களை ஒவ்வொரு சூழ்நிலையிலும் உயர்த்தக்கூடியதாக இருக்கும், இந்த காலத்தில் நீங்கள் வியக்க தக்க லாபத்தை பெறுவீர்கள்.

வெளியூர், வெளிநாடு தொடர்பான பணிகளை செய்யக்கூடியவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். நிதிநிலை வலுவடைய கூடிய காலம். நீங்கள் இழந்த பணத்தை திரும்ப பெறுவீர்கள். நிதிநிலை வலுவடையும். உங்களுடைய வங்கி பண நிலை உயர்வடையும். சகோதர சகோதரிகளின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். சூரியனின் அமைப்பானது உங்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். முடிக்கப்படாமல் நீண்ட காலமாக இருக்கக்கூடிய பணிகளை நிறைவேற்றுவதற்கான பொன்னான வாய்ப்புகள் அமையும். இந்த காலத்தில் தொழில் தொடர்பாக புதிய முயற்சிகள் தேவைப்படும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு உங்களுடைய தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.உங்களுடைய கடின உழைப்பிற்கான வருமானம் கணிசமாக உயரும்.

தொழில் செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு அதற்கான முயற்சிகள் முன்னேற்றத்தை தரும். இந்த காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவால் தடைபட்டு வந்த பணிகள் நிறைவேறும்.

துலாம் ராசி

துலாம் ராசி அன்பர்களுக்கு உங்கள் ராசியில் இருக்கும் சூரியனுக்கும் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருக்கும் சனி இடையே உருவாகும் சடாஷ்டக யோகம் பல்வேறு விதத்தில் சிறப்பான தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த கிரகங்களின் அருளால் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். வணிக ரீதியான கூட்டணிகள் மூலம் பெரிய லாபத்தை பெற முடியும்.

நிதிநிலை வலுவடையும். எதிர்பாராத பெரிய நிதி ஆதாயம் கிடைப்பதோடு, உங்களுடைய கௌரவமும், புகழும் அதிகரிக்கும். வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இனிமையான காலமாக அமையும். உடல் நலம் தொடர்பான சிக்கல்கள் நீங்கும்.

தனுசு ராசி

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த காலம் உங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்க செய்யக்கூடிய தொழில் புதிய உயரத்தை அடையும். புதிய முயற்சியை மேற்கொள்ள நல்ல காலமாக அமையும். புதிய நண்பர்கள், தொடர்புகள் கிடைக்கும். இது உங்கள் தொழிலை விரிவுபடுத்த உதவும். வியாபாரம் தொடர்பாக புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

உங்களுடைய வருமானம் மற்றும் செலவு இடையே சமநிலையை பேணவேண்டிய காலம். அதே சமயம் புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட முடியும். இது உங்கள் உறவையும் மேலும் பலப்படுத்தும்.

மகர ராசி

சூரியன் மற்றும் சனி உருவாக்கக்கூடிய சடாஷ்டக யோகம் உங்களுக்கு நன்மைகளை தரும். நீங்கள் செய்யும் வணிகத்தில் முன்னேற்றமும், சமூகத்தில் உங்களுடைய கௌரவம் உயர்வதற்கான காலமாக அமையும். பணியிடத்தில் இருப்பவர்கள் கூடுதல் வாய்ப்புகளை பெறுவார்கள். இதன் மூலம் உங்களின் திறமையை நிரூபிக்க முடியும்.
குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் புதிய வேலைக்கான வாய்ப்புகள் பெறுவீர்கள்.

உங்களுடைய அணுகுமுறை மூலம் நல வெற்றி காண முடியும். முறையான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பு உங்களின் வேலைகளை வேகமாக முடிக்க உதவும். அதே சமயம் அனைவரிடமும் அனுசரித்து செல்லவும். சண்டை சச்சரவுகள் தவிர்க்கவும்.

Source link