ரித்விக் நடிப்பு: ரித்விக் என்று சொன்னால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். படத்தில் யாராவது இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தாலே ஆஹா, ஓஹோ என்போம். ஆனால் ரித்விக்கோ சிறு வயதில் இருந்தே மல்டிஸ்டாரராக உள்ளார். அதாவது ஆண், பெண் என பல வேஷம் போட்டு அசத்தும் திறமைசாலி தான் அந்த குட்டிப் பையன்.
ரித்விக்கிற்கு பெண் வேடம் அவ்வளவு அழகாக இருக்கும். ரொம்ப டென்ஷனாக இருந்தால் ரித்விக்கின் யூடியூப் சேனலில் அவரின் வீடியோக்களை பார்த்தால் சிரித்து சிரித்து சந்தோஷமாகிவிடுவோம். அந்த திறமைசாலி பையன் செமயாக நடிப்பான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் 12 வயதில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருவது பலருக்கும் தெரியாது.
ஜெயிலர் 2 படத்தில் ரித்விக்கின் அம்மாவாக நடித்த மிர்னா மேனன் அண்மையில் பேட்டி ஒன்றில் தன் ரீல் மகன் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி ஓனர் என்று கூறினார். அவர் சொன்னதை கேட்டு, என்னாது கம்பெனியா, இந்த வயதிலா, நான்லாம் 12 வயதில் ஜாலியாக ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தேனே என நினைக்க வைத்துவிட்டார் ரித்விக்.
ரித்விக் பேட்டி: இதையடுத்து ரித்விக் ஒரு இணையதள சேனலுக்கு பேட்டி அளித்தார். என்ன தம்பி, உங்களை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டோமே உண்மையா என கேட்டதற்கு, ஆம் என்றார். சும்மா ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் வைத்திருக்கிறேன் என பதில் அளித்தார். உங்கள் நிறுவனத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், என்ன வேலை செய்வீர்கள் என கேட்டதற்கு, நாங்கள் பைதான் கோடிங் செய்வோம். நாங்கள் 5 பேர் இருக்கிறோம். மற்றும் பெயருக்கு ஒரு 5 பேர் இருக்கிறார்கள் என்றார்.
ரித்விக் சொன்னதை கேட்ட தாய்மார்களோ, பார்த்தியா அந்த புள்ள எல்லாம் கம்பெனி வச்சிருக்கான். நீயும் தான் இருக்கியே. எப்பொழுது பார்த்தாலும் செல்போனை நோண்டிக்கிட்டி என பிள்ளைகளை வசைபாடுகிறார்கள். ஜெயிலர் படத்தில் பார்த்தது மாதிரியே தான் தற்போதும் இருக்கிறார் ரித்விக். அவரின் குரல் மட்டும் மாறியிருக்கிறது.
தலைவர் ரீல் பேரன்: ஜெயிலரில் அவர் தாத்தா ரஜினிகாந்தை படாதபாடு படுத்தியபோது டேய் தம்பி, அவர் சூப்பர் ஸ்டாருடா, இப்படி படுத்திறியே என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் செல்லமாக கண்டித்தார்கள். ஜெயிலருக்கு பிறகு ரித்விக் மேலும் பிரபலமானார். இந்நிலையில் ஜெயிலர் 2 படத்திலும் நடித்திருக்கிறார்.
தன்னை பார்க்கும் ஆட்கள் கேட்கும் முதல் கேள்வியே, ரஜினிகாந்த் சார் உன்னிடம் என்னப்பா பேசினார் என்பது தான் என்கிறார் ரித்விக். 51 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ரித்விக்கிற்கு மிகவும் பிடித்தது முத்து. மேலும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படம் தான் ரித்விக் பார்த்த முதல் ரஜினி படமாகும்.
ரித்விக்கிற்கு அனிருத் என்றால் மிகவும் பிடிக்கும். அனிருத் இசையமைத்த பாடல்களை ரிப்பீட் மோடில் போட்டு கேட்கிறார். மேலும் தன் playlist முழுக்க அனிருத் ரவிச்சந்தர் பாட்டு தான் என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
தன்னை குட்டி அனிருத் என பலரும் தெரிவித்ததாகவும் சொல்லியிருக்கிறார். நயன்தாராவின் O2 படம் மூலம் கெரியரை துவங்கிய ரித்விக் தற்போது படிப்பில் கவனம் செலுத்த வசதியாக புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார்.
Source link
