நிர்வாணமாக மீட்கப்பட்ட நர்ஸ் உடல் – நகைக்காக செவிலியரை கொன்றதாக கைதான சரவணன் பரபரப்பு வாக்குமூலம் – perundurai nurse murder for 4 soverign gold hospital employee saravanan under arrest

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே செவிலியரை கடத்திச்சென்று படுகொலை செய்த வழக்கில், உடன் பணிபுரிந்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பூங்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ரஞ்சித் குமார், இவரது அத்தை மகள் உத்ராவிற்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வாடகை வீட்டில் இருவரும் தங்கி இருந்தனர். ரஞ்சித் குமார் அங்குள்ள இறைச்சி கடையில் வேலைக்கும், நர்சிங் படித்துள்ள உத்ரா அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்றாம் தேதி முதல் செவிலியராகவும் வேலை பார்த்து வந்தனர்.

கணவர் வரும் முன்பே மருத்துவமனையில் இருந்து சென்ற நர்ஸ்

காலையில் வேலைக்குச் செல்லும்போது ரஞ்சித் குமார் தனது மனைவியை மருத்துவமனையில் விட்டுச் செல்வதும் இரவு வீடு திரும்பும் போது அழைத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த அக்.14.ம் தேதி மனைவியை அழைத்து வருவதற்காக மருத்துவமனைக்கு சென்ற போது நர்ஸ் உத்ரா அதற்கு முன்பாகவே அங்கிருந்து சென்று விட்டதாக கூறியுள்ளனர். ஆனால் உத்ரா வீடு திரும்பாத நிலையில் ரஞ்சித் குமார் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் செவிலியர் மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நிர்வாணமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்

இந்த நிலையில், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் நிர்வாணமாக அழுகிய நிலையில் உத்ரா 17.ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்ட போலீசார், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய போலீசார், மருத்துவமனையில் இருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். உத்ரா பணிபுரியும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் திருப்பூரை சேர்ந்த 23 வயது இளைஞர் சரவணன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

சரவணனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

இதன் பேரில் சரவணனை காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் உத்ராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பணிமுடித்து செல்லும் போது நர்ஸ் உத்ராவை, சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது உத்ரா அணிந்திருந்த 4 சவரன் நகையை பறிக்க திட்டமிட்ட சரவணன், அவரை பெருந்துறை செல்லும் வழியில் அழைத்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், நகையை பறித்து கொண்டு கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் உத்ராவின் சடலத்தை சாலையோரம் வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைதான சரவணனிடம் இருந்து 4 சவரன் நகை மீட்பு

நர்ஸ் உத்ரா கொலை வழக்கில் கைதான சரவணனிடம் இருந்து உத்ராவின் 4 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். நகைக்காக, இளம் பெண் செவிலியரை தனியார் மருத்துவமனை ஊழியர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link