யார் அந்த மேலிடம்? – தனது கைது நடவடிக்கை எதிராக முழங்கிய தவெக கார்த்திகா – arrested ntk candidate karthiga questions tvk government and who is the power center

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின் போது, தமிழக முதலமைச்சரின் ரோடு ஷோ (Roadshow) வாகன அணிவகுப்புப் பாதையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ய முயன்றதாகவும், அதனைத் தொடர்ந்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் மற்றும் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தியதாகவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடை மாற்றக்கூட நேரம் கொடுக்காமல் இரவு உடையில் கைது

தாராபுரத்தில்நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா, அதிகாலையில் இரவு உடையில் என்னை கைது செய்துள்ளனர், நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா? என கேள்வி எழுப்பி உள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் இறுதி பிரச்சார தினத்தன்று முதலமைச்சருக்கு மட்டும்தான் வாக்கு சேகரிக்க உரிமை உள்ளதா எங்களுக்கு வாக்கு சேகரிக்க உரிமை இல்லையா? என்றுதான் கேள்வி எழுப்பியதாக கூறினார்.

இன்று (அக்.20) அதிகாலையில் இரவு உடையில் என்னை கைது செய்துள்ளனர். நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா? விஜய் ஆட்சி ஒழிக என முழக்கம் எழுப்பினார். உடன் அங்கிருந்த நாதக நிர்வாகிகளும் விஜய் ஆட்சி ஒழிக என்று முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை

இதனைத் தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனைவிபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே கார்த்திகாவை அழைத்துச் சென்ற போலீசார் உடனடியாக மருத்துவமனை கதவுகளை அடைத்தனர். கார்த்திகா கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காவல்துறையினர், “இது தற்போதைய ஆளும்கட்சியின் பழிவாங்கும் மற்றும் பாசிச அரசியல்” என்றார்.

கார்த்திகாவின் இந்த கைதுக்கு அதிமுக, பாமக மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கார்த்திகா கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

மாற்றம், மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், அரசியல் எதிர்ப்புகளை எதிர்கொள்ள கைது நடவடிக்கைகளையே தீர்வாகக் கருதுவது எந்த வகையில் நியாயம்? என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்துள்ளன.

எனவே, தமிழக அரசு இந்தக் கைது நடவடிக்கையை உடனடியாக மறுபரிசீலனை செய்து,கார்த்திகாவை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் தனது கண்டன அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Source link