”எதிரிகளோடு சேர்ந்து கூட்டு சதி செய்தார்.. அவரால் தான் தேர்தலில் தோற்றோம்..” ஓபிஎஸ்-ஐ விளாசிய இபிஎஸ்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. மேலும் தங்களை பற்றி வைக்கும் விமர்சனங்களுக்கும் சுடச்சுட பதிலடி கொடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் இபிஎஸ்-ஐ என்று துரோகி என்று விமர்சித்த ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்..

நேற்று காஞ்சிபுரத்தில் இபிஎஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடினார்.. அப்போது “ பேரறிஞர் அண்ணா தொடங்கிய திமுக குடும்ப கட்சியாக மாறி உள்ளது.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தினர்.. சட்டப்பேரவையில் என் மேஜையில் ஏறி டான்ஸ் ஆடினர்.. அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்கும் போது திமுகவினர் ரகளை செய்தனர்.. ஆனால் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு விட்டது.. அதனை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. அப்போது ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு நடந்து சென்றார்..

பெரும்பான்மை நிரூபிக்கும் போது என் கண் முன்னே அதிமுக ஆட்சிக்கு எதிராக ஓபிஎஸ் வாக்களித்தார்.. எட்டப்பனாக இருந்தவர் எதிரிகளோடு சேர்ந்து நமக்கு எதிராக வாக்களித்தார்.. அதைக் கூட பொறுத்துக் கொண்டோம்.. மூத்த நிர்வாகிகள் சொன்னதை கேட்டு ஓபிஎஸ்-ஐ இந்த இயக்கத்திற்கு ஒருங்கிணைப்பாளராக அவரை நியமித்தோம்.. கட்சிக்கு தலைமை பொறுப்பு கொடுத்தோம்.. துணை முதல்வர் பொறுப்பு கொடுத்தோம்.. அற்புதமான இலாகா கொடுத்தோம்.. அதன்பின்னர் எதிரிகளோடு சேர்ந்து கூட்டு சதி செய்தனர்..

2021 தேர்தலில் நமது ஆட்சியை அமைப்பதற்கு நல்ல சூழல் இருந்தது.. திமுகவின் பி டீமாக இருந்து வெற்றி வாய்ப்பை இழக்க செய்தார்கள்.. இப்படிப்பட்டவர்கள் யார் என்று அடையாளம் காட்டப்பட்டுவிட்டது.. பூனைக்குடி வெளியே வந்துவிட்டது.. உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்து விட்டது.. ஒரு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து தலைமை தாங்கினார்..  இவருக்கு முதலமைச்சர் என்ற அடையாளத்தை ஜெயலலிதா கொடுத்தார்.. தொண்டர்கள் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை கொடுத்தனர்.. இவ்வளவு பெரிய பதவி கொடுத்தும் அவரின் பதவி ஆசை அடங்கவில்லை. இப்போது தீயசக்தி திமுக உடன் போய் சேர்ந்துவிட்டார்..

நான் 1971-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தேன்.. 10 முறை தேர்தலில் போட்டியிட்டேன்.. கட்சிக்காக தொடர்ந்து உழைத்தேன்.. விசுவாசமாக இருந்தேன்.. அதனால் தான் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டேன் பொதுச்செயலாளர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளேன்..” என்று தெரிவித்தார்.

Flash : சென்னை காவல் ஆணையர் அதிரடி மாற்றம்..! தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Source link