Mumbai Indians – 9 வீரர்களை விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் முடிவு: 5 இடங்களுக்கு வீரர்களை வாங்கணும் – mumbai indians chance to release this nine players before ipl 2027 mini auction

மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் 2021 சீசனில் இருந்து, புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. இதனால், மும்பை இந்தியன்ஸின் மதிப்பும் குறைய ஆரம்பித்துள்ளது. ஆகையால், ஐபிஎல் 2027 சீசனில் இருந்து, அணயில் அதிரடி மாற்றங்களை செய்ய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதால், ஹர்திக் டிரேடிங்கில் வெளியேற முடிவு செய்துள்ளார். இதனால், ஹர்திக்கை டிரேடிங்கிற்கு அல்லது ஏலத்திற்கு அனுப்ப மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், தேவையில்லாத சில வீரர்களையும் வெளியேற்ற, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்து, 9 பேர் பட்டியலை தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் யார்? ஹர்திக் பாண்டியா உடன் தீபக் சஹார், ட்ரெண்ட் பௌல்ட், ராஜ் பவா, ராபின் மின்ஸ், குவின்டன் டி காக், டேனிஸ் மல்வார், அன்னோலேகர், ரகு சர்மா ஆகியோரை வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.

எந்தெந்த இடங்களுக்கு வீரர்கள் தேவை: மும்பை இந்தியன்ஸ் அணி, இவர்களை வெளியேற்றும் பட்சத்தில், 5 இடங்களுக்கு வீரர்களை வாங்கியாக வேண்டிய தேவை இருக்கிறது.

ஓபனராக ஆடக் கூடிய விக்கெட் கீப்பர் பேட்டர் தேவைப்படுகிறார். மேலும், ஒரு டெத் பௌலரும் தேவை. முழுநேர ஸ்பின்னர், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், ஒரு அதிரடி ஓபனர் என 5 இடங்களுக்கு வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஹர்திக் டிரேடிங்கில், மும்பை கவனம்: இந்நிலையில், ஹர்திக் பாண்டியா டிரேடிங் விஷயத்தில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், மிகவும் கவனமாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, இரண்டு வீரர்களை வாங்க வேண்டும் என்ற முடிவில் மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து யாஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் ஒரு வீரரை மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்க்கிறது.

அதேநேரத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இதுகுறித்து பேசிய நிலையில், அவர்கள் பும்ராவை எதிர்பார்க்கிறார்கள். ஹர்திக் வேண்டாம், பும்ராவை அனுப்பினால் இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட் இருவரையும் தருகிறோம் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதற்கு மும்பை இந்தியன்ஸ் இசைவு தெரிவிக்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகள், ஹர்திக் பாண்டியா டிரேடிங் விஷயத்தில் இருந்து பின்வாங்கிவிட்டனர். அதேநேரத்தில், கேகேஆர் அணியும் ஹர்திக்கை வாங்க முயன்ற நிலையில், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணாவை கேட்பதால், அவர்களும் தற்போது ஒதுங்கிக் கொண்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் மட்டுமே, யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை கொடுத்துவிட்டு ஹர்திக்கை பெறுவது குறித்து பேசி வருகிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், இரண்டு வீரர்களை எதிர்பார்ப்பதால், பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

புதுக் கேப்டன் யார்? ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்து, மும்பை இந்தியன்ஸில் புதுக் கேப்டனை தேர்வு செய்யும் பணியை, ரோஹித் சர்மாவிடம் மும்பை இந்தியன்ஸ் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், திலக் வர்மாவை ரோஹித் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்திக் பாண்டியா டிரேடிங் டீல் முடிந்தப் பிறகு, இதுகுறித்து அறிவிக்க மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link