யார் இந்த கதிரவன்? திரும்பி பார்க்க ரூ.40 கோடி ஹெலிகாப்டர் கிப்ட்- தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் வளர்ச்சி – know about manachanallur mla kathiravan gifts helicopter to father srinivasan for 81st birthday

மணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் தனது தந்தைக்கு ஹெலிகாப்டர் ஒன்றை பரிசாக வழங்கிய செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பிறந்த நாள் விழாவை ஒட்டி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், இந்த பிரம்மாண்டத்தை நடத்தி காட்டியுள்ளார். இவர்கள் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் குழுமத்தை சேர்ந்த குடும்பத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.

பிறந்த நாளுக்கு பெருசா என்ன பரிசு தந்து விடப் போகிறார்கள் எனக் கேட்பதுண்டு. ஆனால் இங்கு பெருசாக ஒரு பரிசை தந்தைக்கு அளித்து தமிழகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தந்தை சீனிவாசனுக்கு மகனும், மணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏவுமான கதிரவன் ஹெலிகாப்டர் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு 40 கோடி ரூபாய். இவர் எம்.எல்.ஏ என்பதால் இவர் 2026 சட்டப்பேரவை தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவை வைத்துக் கொண்டு, எப்படி வருவாய் வந்தது, கணக்கில் காட்டப்பட்ட வருவாய் விவரமா போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.

2026 வேட்புமனுவில் கதிரவன் சொத்து விவரங்கள்

வங்கி சேமிப்பு கணக்கு – ரூ.14,23,788 வாகனத்தின் இன்றைய மதிப்பு – ரூ.15,50,000 பிற அசையும் சொத்துகள் – ரூ.37,08,26,212 மொத்த அசையும் சொத்துகள் – ரூ.37,38,00,000 அசையா சொத்துகள் – ரூ.44.50 கோடி எம்.எல்.ஏ கதிரவன் மொத்த சொத்து மதிப்பு – ரூ.81.88 கோடி மனைவி மற்றும் மகன் பெயரில் சொத்து மதிப்பு – ரூ.71.62 கோடி

சர்ப்ரைஸ் கொடுத்த மணச்சநல்லூர் எம்.எல்.ஏ

எனவே சொத்து மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் ஹெலிகாப்டர் வாங்கி பரிசாக தருவது மிக எளிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவனின் தந்தை சீனிவாசன் பிரபல கல்வி நிறுவனங்களின் உரிமையாளராக திகழ்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்திற்கு உட்பட்ட அனைத்தும் இவர்களுக்கு சொந்தமானது தான்.

பிரபலமான தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம்

சமயபுரத்தில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், பொறியியல் கல்வி நிறுவனங்கள், விவசாய கல்லூரிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் சென்னை, திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர தனலட்சுமி சீனிவாசன் சிட் பண்ட்ஸ் என்ற பெயரில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கிளைகளை நடத்தி வருகின்றனர்.

விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை வாங்கிய குடும்பம்

மேலும் ஸ்ரீ பசவேஸ்வர் சர்க்கரை ஆலை இவர்களுக்கு சொந்தமானது தான். DS பிராண்ட் என்ற பெயரில் ஓட்டல்கள், பேருந்து சேவை, உள்ளூர் மினி பஸ் சேவை, தனலட்சுமி சீனிவாசன் டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் என பெரிய சாம்ராஜ்யத்தையே வைத்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் ஆண்டாள் அழகர் கல்லூரியை கைவசமாக்கியது சீனிவாசன் கல்வி குழுமத்தினர் தான் என்பது கவனிக்கத்தக்கது.

அரசியல் பிளஸ் வியாபாரம் – எம்.எல்.ஏ கதிரவனின் எழுச்சி

தந்தைக்கு பிறகு மகன் கதிரவனுக்கு தான் ஒட்டுமொத்த வர்த்தகமும், கல்வி நிறுவனங்களும் வந்து சேரும் என்பதில் சந்தேகமில்லை. கதிரவனை பொறுத்தவரை அரசியலிலும் கால் பதித்து செல்வாக்கு பெற்ற நபராக மாறியிருக்கிறார். திமுகவில் இணைந்து 2021, 2026 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர். முதல் தேர்தலில் 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 12,364 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றிருக்கிறார்.

Source link