மேட்டூர் அணை 54 அடி, வைகை 44 அடி: சரிந்த நீர்மட்டம், கைகொடுக்குமா பருவமழை? அக்டோபர் 21 நிலவரம் – mettur dam vaigai periyar bhavani sagar amaravathi water level inflow outflow on oct 21

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் தொடர்பாக முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் தற்போது பாதியளவிற்கும் கீழ் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதம் வந்துவிட்டாலே வடகிழக்கு பருவமழைக்கான அப்டேட்களும் வரத் தொடங்கிவிடும். நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக மழை பெய்யுமா, இல்லை ஏமாற்றம் அளிக்குமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் எல்-நினோ தாக்கம் தொடர்பான செய்திகள் சற்று கலக்கமூட்டும் வகையில் அமைந்துள்ளன. தற்போதைய சூழலில் குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பிக்கும் வகையில் நீர்நிலைகள் இருக்கின்றன.

பவானிசாகர் அணை நிலவரம் (நண்பகல் 12 மணி)

அணை நீர்மட்டம் 61.05 அடி (மொத்த நீர்மட்டம் 105 அடி) நீர் இருப்பு 7.59 டி.எம்.சி (மொத்த டி.எம்.சி 32.8 டி.எம்.சி) நீர்வரத்து விநாடிக்கு 2,833 கன அடி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 55 கன அடி பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றத்தை பொறுத்தவரை கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 5 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 50 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. காலிங்கராயன் வாய்க்காலில் எந்தவித நீரும் வெளியேற்றப்படவில்லை.

திருப்பூர் அமராவதி அணை நிலவரம் (காலை 6 மணி)

அணை நீர்மட்டம் – 36.58 அடி (மொத்த நீர்மட்டம் 90 அடி) நீர் இருப்பு – 0.6 டி.எம்.சி (மொத்த நீர் இருப்பு 4.04 டி.எம்.சி) நீர் வரத்து – விநாடிக்கு 248 கன அடி நீர் வெளியேற்றம் – விநாடிக்கு 200 கன அடி

சேலம் மேட்டூர் அணை நிலவரம் (காலை 8 மணி)

நீர் மட்டம் 54.91 அடி (மொத்த நீர்மட்டம் 120 அடி) நீர் இருப்பு 21.04 டி.எம்.சி (மொத்த நீர் இருப்பு 93.47 டி.எம்.சி) நீர்வரத்து விநாடிக்கு 4,834 கன அடி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 6,000 கன அடி

காவிரி நீருக்காக மல்லுக்கட்டும் தமிழக அரசு

மேட்டூர் அணையை பொறுத்தவரை நேற்று 55.07 அடியாக நீர் மட்டம் இருந்தது. இன்று (அக்டோபர் 21) சற்று நீர்மட்டம் குறைந்துள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு பாசன தேவைகளுக்கு தொடர்ச்சியாக நீர் தேவைப்படுகிறது. இவர்கள் பெரிதும் நம்பியிருப்பது மேட்டூர் அணையை தான்.

ஏற்கனவே கர்நாடகா அரசுடன் மல்லுக்கட்டி கொண்டு காவிரி நீரை உரிய அளவு திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தது. ஆனால் தங்களது நீர் தேவை, நீர் பற்றாக்குறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடகா அரசு கறார் காட்டியது. இந்த விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் படிகளை ஏறி இறங்கி வருகின்றனர்.

பெரியார் அணை (காலை 6 மணி)

நீர் மட்டம் – 116.90 அடி நீர் இருப்பு – 2.06 டி.எம்.சி நீர்வரத்து – விநாடிக்கு 1,030 கன அடி நீர் வெளியேற்றம் – விநாடிக்கு 405 கன அடி

வைகை அணை (காலை 6 மணி)

நீர் மட்டம் – 44.88 அடி (மொத்த நீர் மட்டம் 71 அடி) நீர் இருப்பு – 1.39 டி.எம்.சி (மொத்த நீர் இருப்பு 6.09 டி.எம்.சி) நீர்வரத்து – விநாடிக்கு 442 கன அடி நீர் வெளியேற்றம் – விநாடிக்கு 86 கன அடிவைகை அணையில் நேற்று 44.59 அடி நீர் இருந்தது. இன்றைய சற்றே அதிகரித்துள்ளது.

Source link