நவகிரகங்களில் குரு முழு சுபர் என அழைக்கப்படுகின்றார். அதுவே கேது இருள் கிரகம், அசுப கிரகங்கள் வரிசையில் வருகின்றார். இந்த இரண்டு கிரகங்களும் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசியில் ஒன்றாக சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளனர். இதனுடைய தாக்கம் காரணமாக சில ராசிகளுக்கு ஆன்மீக சிந்தனை அதிகரிப்பது, குடும்ப வாழ்க்கையில் பற்றின்மை மற்றும் எதிர்பாராத மாற்றங்களை சந்திப்பார்கள். அது மட்டுமில்லாமல் சுயநலமாக யோசிக்காத நபர்களுக்கு நிதி நன்மைகளையும் பெறுவார்கள். எந்தெந்த ராசிகள் சுப பலனை பெற வாய்ப்பு உள்ளன தெரிந்து கொள்வோம்.
குரு-கேது சேர்க்கை 2026:
ஜோதிடத்தில் குரு பகவான் அறிவு, செல்வம் மற்றும் நற்பண்புகளுக்கு காரகனாக குறிப்பிடப்படுகின்றார். அதே சமயம் கேது ஒரு நிழல் கிரகமாகவும். ஆன்மீக சிந்தனை. எதிர்பாராத மாற்றங்களை தரக்கூடியவர், ஞானம் உள்ளிட்டவற்றை தரக்கூடியவர். குரு பகவான் அக்டோபர் 31ம் தேதி மதியம் 12:02 மணிக்கு, சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனேவே சஞ்சாரம் செய்யக்கூடிய, கேதுடன் குரு இணையக்கூடிய நிகழ்வு நடக்க உள்ளது. இதனால் சமூகத்தில் நற்பெயர், நிதிநிலை ரீதியாக முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என சுவாரசியமான பலன்களை பெற உள்ள ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசி அன்பர்களுக்கு குரு மற்றும் கேதுவின் சேர்க்கை உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமைவதால், உங்களுடைய வருமானம் உயர்த்துவதற்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய சிக்கல்கள் தீரும், உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். பணியிடத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும்.
தொழில் செய்யக் கூடியவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். மேலும் வருமானம் உயரும் என்பதால் முதலீடுகளை உயர்த்தவும் அதன் மூலம் லாபத்தை சம்பாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு. இந்த காலத்தில் நற்பலன்கள் அதிகரிக்கும் என்றாலும், அபாயங்களை நன்கு உணர்ந்து செயல்படுவது அவசியம்.
கடக ராசி
கடக ராசி அன்பர்களுக்கு தனஸ்தானத்தில் குரு மற்றும் கேதுவின் இணைந்த நிலை உங்களுக்கு நிதிநிலை ரீதியாக நன்மைகளை தரக்கூடியதாக அமையும். வருமானத்தை உயர்த்துவதற்கான புதிய வழிகளை கண்டறிவீர்கள், பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலன்களை பெறுவீர்கள்.
இத்தனை நாட்களாக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து பணிகளிலும் நல்ல பலன் எதிர்பார்க்கலாம். தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். முன்னர் நீங்கள் செய்த முதலீடுகள் லாபத்தை தரக்கூடியதாக, அதன் மூலம் நீங்கள் சேமிப்பை அதிகப்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு.
சிம்ம ராசி
சிம்ம ராசியில் குரு மற்றும் கேதுவும் இணைகின்றனர். இந்த கிரக இணைவு உங்களுக்கு முக்கியமான அமைப்பாக இருக்கும். பல்வேறு விதத்தில் சிறந்த பலன்களை அடைவீர்கள். பணியிடத்தில் புதிய திட்டங்களை பணியாற்றவும், முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். உங்களுடைய பொறுப்புகள் அதிகரித்தாலும் அதை சரியான விதத்தில் செய்து முடிக்க முடியும்.
நீண்ட காலமாக நிலுவில் இருக்கக்கூடிய வேலைகளை முடிக்க இருக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் மனதை நிதானமான நிலையில் வைத்து எடுக்கும் சரியான முடிவுகள் எதிர்காலத்தில் அற்புத பலன்களை தரக்கூடியதாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். சூழலுக்கு ஏற்ற விதத்தில் நீங்கள் செயல்படுவது அவசியம்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு, உங்கள் ராசி அதிபதி குரு பகவான், அற்புத பலனை தரக்கூடிய ஒன்பதாம் ஸ்தானத்தில் அமைவதும், பங்கு கேதுவுடன் இணைவதால் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.
சமூகத்தில் உங்களுக்கான மரியாதை கிடைக்கும். வணிகத்தில் எதிர்பார்த்த பலனை பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும் என்றாலும், அவசரப்பட்டு முடிவு எடுப்பதை தவிர்க்கவும். அனைத்து விஷயங்களை ஆராய்ந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள் மற்றும் முயற்சிகள் உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும்.
குறிப்பு:
இங்கே வழங்கப்பட்டுள்ள ஆன்மீக, ஜோதிடத் தகவல்கள் மற்றும் பரிகாரங்கள் அனைத்தும் ஜோதிட சாஸ்திரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்தத் தகவல்களைக் கருத்தில் கொள்ளும்போது, தொடர்புடைய நிபுணர்களை அணுகி முழுமையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
