டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியீடு: எப்படி டவுன்லோடு செய்வது- நவம்பர் 1ல் தேர்வு – how to download tnpsc group 2 hall ticket 2026 from direct link

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்விற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எப்படி டவுன்லோடு செய்வது என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம். வரும் நவம்பரில் நடைபெறும் தேர்விற்காக தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வுகள் நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் நவம்பர் 1, 2026 அன்று முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் tnpsc.gov.in இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதனை டவுன்லோடு செய்து தேர்வர்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டில் 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் எங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link