தேவர் குருபூஜைக்கு செல்லும் விஜய்? முக்குலத்தோர் வாக்குகளை குறிவைக்கும் தவெக: சாதிய மோதல் ஏற்படுமா? – will cm vijay attend thevar guru pooja is tvk targeting mukkulathor votes

முதல்வர் விஜய் ஒரு சாஃப்ட் ஆன அரசியலையே செய்கிறார் என்பது அவரின் செயல்பாடுகளில் தெரிகிறது. காங்கிரஸுக்கு ஆதரவு கொடுக்கும் விஜய், மோடியையும் பகைத்துக் கொள்ளாமல் இருக்கிறார். அதே பேட்டர்னைத்தான் பின்பற்றி வருகிறார்.இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசு தலித்துகளுக்கான அரசாக மாறியிருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, தவெக ஒரு பெரிய சைஸ் விசிக என்ற பேச்சுகளும் பகடியாக அடிபடுவது உண்டு.

இந்தச் சூழலில், வருகிற அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு நாளான தேவர் குருபூஜை கொண்டாடப்படும். இதில் முதல்வர் விஜய் பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இமானுவேல் சேகரன் குருபூஜையில் பங்கேற்காத விஜய்

ஆனால், அதே சமயத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இமானுவேல் சேகரன் குருபூஜையில் முதல்வர் விஜய் கலந்துகொள்ளவில்லை. பதிலாக, தனது எக்ஸ் பக்கத்தில், “சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக சமூக நீதி போராட்டத்தில் களம் கண்ட இமானுவேல் சேகரன் நினைவைப் போற்றுவோம்” என்று பதிவு ஒன்றை மட்டுமே வெளியிட்டுள்ளார்.

முக்குலத்தோர் வாக்குக்காக பயணமா?

தமிழக வாக்கு அரசியலில் முக்குலத்தோரின் வாக்கு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு முக்குலத்தோர் வாக்கு திமுக பக்கம் சென்றிருந்தாலும், அதிமுக தலைவர்கள் பிரிந்து இருந்ததால் அந்த வாக்குகள் சிதறின.

அதோடு மட்டுமல்லாது, தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் விஜய் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு பிம்பமும் இருக்கிறது. இந்தச் சூழலில்தான்முக்குலத்தோரின் வாக்கு வங்கியையும் தவெக பக்கம் கொண்டுவரவே முதல்வர் விஜய் இந்தப் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சாதிய மோதலுக்கு வழிவகுக்குமா?

ஆனால், அதே சமயத்தில் விஜய் ஒருவேளை குருபூஜைக்குச் சென்றால், அது அந்தப் பகுதியில் மிகப்பெரிய சாதிய மோதல்களை ஏற்படுத்தும் என்றும் மூத்த அரசியல்வாதிகள் அறிவுறுத்துவதாகத் தெரிகிறது.

நாளைக்கு இந்தியாவே Trend ஆக போகும் முதல்வரின் டெல்லி விசிட்! | Exclusive |

இந்தச் சூழலில்தான் இந்த மாத இறுதியில் முதல்வர் விஜய் தென் மாவட்டங்களில் ஏதேனும் பயணத்தைத் திட்டமிடுவாரா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

Source link