சென்னை,
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கும், கிராமுக்கு ரூ.125 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,125-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே, அதாவது, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
11.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,800 (இன்று)
10.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,000 (நேற்று)
09.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 ஒரு சவரன் ரூ.1,11,920
