தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாகவும் பேச்சு மொழியாகவும் இருக்கக்கூடிய தமிழ் மொழிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் தெலுங்கு மொழி பேசப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.
மொழிப்பற்றுக் கொண்ட மாநிலம்:
தமிழக வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே மொழிப் போராட்டங்கள்தான் மிகப்பெரிய அளவில் இருந்திருக்கின்றன. குறிப்பாக, 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த நிலையில், தமிழகத்தில் மொழிப்பற்று தொடர்பான விவாதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, தமிழ் மொழி செம்மொழியாக விளங்குவதால், அதற்கான சிறப்புகளும் காலம் தொட்டு குறையாமல் இருந்து வந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் 96 மொழிகள் பேசப்படுகின்றன
தமிழ்நாட்டில் 96 மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு மொழிப்பற்று இருக்கிறதோ, அதே அளவிற்குப் பிறமொழிகளைப் பேசக்கூடிய மக்களும் வாழ்கின்றனர். கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான லாங்குவேஜ் அட்லஸ் அறிக்கையில், தமிழ்நாட்டில் சுமார் 3.9 லட்சம் மக்கள் இந்தி பேசுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில்தான் சமீபத்தில் வெளியான தரவு ஒன்று, தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தபடியாகத் தெலுங்கு மொழி அதிகமாகப் பேசப்படுவதாகக் கூறுகிறது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம்,தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், திருச்சி, கரூர், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான தெலுங்கு பேசும் மக்கள் வாழ்கின்றனர் என அந்தத் தரவு தெரிவிக்கிறது.
சௌராஷ்டிரம், உருது, மலையாளம்
தெலுங்குக்கு அடுத்தபடியாகச் சௌராஷ்டிரம், உருது மற்றும் மலையாள மொழிகளும் தமிழகத்தில் பரவலாகப் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.
மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில்தான் அதிக அளவில் சௌராஷ்டிர மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர்.
நாளைக்கு இந்தியாவே Trend ஆக போகும் முதல்வரின் டெல்லி விசிட்! | Exclusive |
அதேபோல, கேரள எல்லைப் பகுதிகளான நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக அளவிலான மக்கள் மலையாளம் பேசுகின்றனர்.
இரு மொழிக்கொள்கை
கடந்த 60 ஆண்டுகளில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் எனத்தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மாறியிருக்கின்றன. ஆனால், இருமொழிக் கொள்கையில் அவற்றின் நிலைப்பாடு எப்போதுமே மாறியதில்லை. தற்போது புதிதாகப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழக அரசுகூட இருமொழிக் கொள்கையில் ஒத்துப்போகிறது.
அதன் காரணமாகவே இன்றளவும் இந்தித் திணிப்பைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பாஜக தமிழ்நாட்டில் காலூன்றத் தவிப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
