SA vs AUS Test – இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா ஆஸி? 1955-க்கு பிறகு மோசமான ரெக்கார்ட் – australia team winning chance for 2nd test against south africa team

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.

தரமான பதிலடி: இந்நிலையில், முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்னாப்பிரிக்க அணி அபாரமாக விளையாடி வருகிறது.

ஆஸிக்கு பின்னடைவு: முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 425/9 ரன்களை எடுத்து டிக்ளேர் அறிவித்த நிலையில், அதன்பிறகு பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி ஷாக் கொடுத்தது. பிறகு, தென்னாப்பிரிக்க அணி பாலோ ஆன் கொடுத்தது.

அடுத்து, பாலோ ஆன் பெற்று ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி, 156/4 ரன்களை எடுத்து, 170 ரன்கள் பின்தங்கியிருக்கும் நிலையில், 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி, கடைசி நாளில் 6 விக்கெட்களை எடுத்தால் வெற்றியை பெற முடியும். ஆஸ்திரேலிய அணி, கடைசி நாளில் 6 விக்கெட்களை இழக்காமல் ஆடி, போட்டியை டிரா செய்ய வேண்டும். இப்படி, இரண்டு விஷயங்கள், கடைசி நாளின் ஆட்டத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை, தென்னாப்பிரிக்க அணி டிரா செய்தால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் வங்கதேசத்திற்கு இணையான புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி இருக்கும். இதனால், இரண்டாவது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்க அணி இருக்கிறது. மறுபக்கம், இரண்டாவது டெஸ்டில், ஆஸ்திரேலியா தோற்தாலும், அந்த அணி, புள்ளிப் பட்டியலில் தொடர்ச்சியாக முதல் இடத்தில் நீடிக்கும்.

1955-க்கு பிறகு முதல் முறை: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி, உலக அளவில், தொடர்ச்சியாக வல்லரசு அணியாக இருக்கிறது. இந்த அணி, கடைசியாக 1954-1955ஆம் ஆண்டில், சிட்னியில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்டில்தான், ஒரே நாளில் 13 விக்கெட்களை இழந்து சொதப்பியிருந்தது.

அதன்பிறகு, தற்போதுதான் ஒரே நாளில் 13 விக்கெட்களை இழந்து சொதப்பியுள்ளனர்.

Source link