மேட்டூர் அணை நீர்மட்டம் உயரவே இல்லை: சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? டெல்டா விவசாயிகள் கவலை – mettur dam water level stays at 54 feet will samba cultivation be affected delta farmers concerned

120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் பருவமழை தீவிரம் எடுத்திருக்கக்கூடிய சூழலில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் பருவமழையைப் பொறுத்து உயருமா என்று கேள்விகளும் எழுந்திருக்கிறது. அந்த வகையில், மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 54.91 அடியாக உள்ளது. அணையில் தற்போது 21,044 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருக்கிறது.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயராதது ஏன்?

நேற்றும் 54.91 அடியாக மட்டுமேமேட்டூர் அணையின் நீர்மட்டம் இருந்தது. பருவமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் மழை பெய்தாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயராததால் விவசாயிகள் வருத்தம் அடைந்திருக்கின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவைகளுக்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு உயராதது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 4,834 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், அணையிலிருந்து விநாடிக்கு 6,003 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்தைவிட வெளியேற்றம் 1,169 கனஅடி அதிகமாக இருப்பதால்தான் நீர்மட்டம் உயராமல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அணையின் மொத்தக் கொள்ளளவான 93.470 டிஎம்சியுடன் ஒப்பிடும்போது, தற்போது 21.044 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் சுமார் 22.5 சதவீதம் மட்டுமே ஆகும்.

சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் கிடைக்குமா?

ஏற்கனவே விவசாயிகள் எல் நினோ மற்றும் நீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடியை இழந்திருக்கக்கூடிய சூழலில், காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சூழலில் பாசனத்திற்கான நீர் தேவையும் அதிகரித்திருக்கிறது.

கர்நாடக அணைகளின் நீர்மட்டம்

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய கபினி, ஹாரங்கி, ஹேமாவதி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் கவனம் பெற்றுள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணை: 124.8 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது நீர்மட்டம் 101.5 அடியாக இருக்கிறது.

கபினி அணை: 65 அடி முழு உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 49.99 அடியாக இருக்கிறது.

ஹேமாவதி அணை: 117 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 88.44 அடியாக இருக்கிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நீர்மட்டம் எப்படி?

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பல அணைகளில்நீர் இருப்பு குறைவாகவே இருக்கிறது. மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அதைப் போலவே நீர் இருப்பு 93.470 டிஎம்சி வரை பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது நடப்பாண்டில் 54.91 அடி மட்டுமே இருக்கிறது. மேலும், 21.044 டிஎம்சி அளவு தண்ணீர் மட்டுமே இருக்கிறது.

வடகிழக்குப் பருவமழையும் மேட்டூர் அணையின் நீர்வரத்தும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link