மேற்கு மாவட்டங்களில் இன்று பிற்பகல் மழை: அக்டோபர் 25 வரை தொடருமா – வெதர்மேன் எச்சரிக்கை – rain expected in western tamil nadu districts this afternoon will it continue until october 25 weatherman update

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எல் நினோவின் முதல் கட்டத் தாக்கம் விலகிய நிலையில், தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சமீப காலமாக வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு பரவலாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் இன்றைய மழை நிலவரம் என்ன?

இந்தச் சூழலில் தான் தற்போதைய வானிலை நிலவரம் குறித்து டெல்டா வெதர்மேன் ராமச்சந்திரன் பதிவிட்டிருக்கிறார். அவரது பதிவில், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா இடையே மையம் கொண்டிருக்கிற காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நகர்வதன் காரணமாக, இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டிருக்கிறார்.

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேலும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாகக் கனமழையும் பலத்த மழையும் கூட எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்திருக்கிறார்.

குற்றாலம் அருவிகளுக்குச் செல்ல வேண்டாம்

மேலும், அடுத்த மூன்று, நான்கு நாட்களுக்குக் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளுக்கும் நீர்நிலைகளுக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை எப்போது?

அதுமட்டுமின்றி, இன்று பிற்பகல் முதல் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பரவலாகத் தொடங்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக, இந்த முதல் சுற்று மழை அக்டோபர் 25 வரை நீடிக்கக்கூடும் எனவும் வெதர்மேன் தெரிவித்திருக்கிறார்.

Source link