சிவகார்த்திகேயன் ஆசி: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொலு விசேஷம் பிரமாண்டமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டும் நவராத்திரி கொண்டாட்டம் நடந்தது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
அஜித் குமார் மனைவி ஷாலினி, ஜெயிலர் 2 இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன், அவரின் மனைவி ஆர்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அங்கு ரஜினிகாந்த் நடந்து வந்ததை பார்த்த சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் தலைவர் காலை தொட்டு ஆசி வாங்கினார். அவர் ஆசி வாங்கிய வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷேர் செய்து, தலைவர் ரசிகன்னா ரசிகன் தான் என எஸ்.கே.வை பற்றி பெருமையாக பேசி வருகிறார்கள்.சிவகார்த்திகேயனுக்கு எப்பொழுதுமே ரஜினிகாந்த் மீது அதிக மதிப்பும், மரியாதையும், அன்பும் உண்டு. அதனால் அவர் தான் மதிக்கும் தலைவரிடம் ஆசி பெற்றது இயல்பு தான்.
ஷாலினி, ஆர்த்தி: விசேஷத்திற்கு வந்த அனைவருக்கும் சுவையான உணவு பரிமாறப்பட்டது. ஷாலினி அஜித் குமார் அருகில் அமர்ந்து சாப்பிட்டார் ஆர்த்தி. அந்த புகைப்படம் வைரலாகி, தல பொண்டாட்டியும், எஸ்.கே. மனைவியும் ரொம்ப நெருக்கம். அதே மாதிரி அஜித் குமாருக்கு சிவகார்த்திகேயன் நல்ல பழக்கம் என்று அவரின் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அனிருத் திருமண விழா: நவராத்திரியை அடுத்து நடக்கப் போவது அனிருத், காவ்யா மாறனின் காதல் திருமணம் தான். சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திருமணமாக அமைந்துவிட்டது. சேதி தெரியுமா, அனிருத்தும், சன் குழும ஓனர் கலாநிதி மாறன் மகள் காவ்யாவும் காதலிக்கிறார்களாம் என சுமார் மூன்று ஆண்டுகளாக ரசிகர்கள் பேசி வந்தார்கள். ஆனால் பேசுபவர்கள் பேசட்டும் என அமைதியாக இருந்த அனிருத், காவ்யா தற்போது திருமண விபரங்களை கூட உறுதி செய்யாமல் இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
அனிருத் ரசிகர்கள் குழப்பம்: அனிருத் கல்யாணம் கிரீஸில் நடப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கு எல்லாம் இல்லை சென்னையில் தான் நடக்கிறது என்று பிஜார்ன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதனால் தான் அனிருத்தின் காதல் திருமணம் எங்கு நடக்கும் என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
தான் இசையமைக்கும் படம் குறித்து எக்ஸ் தளத்தில் சரியாக அப்டேட் கொடுத்துவிடுவார் அனிருத். ஆனால் காதலி காவ்யா மாறனை மணக்கப் போவது குறித்து இதுவரை ஒரு ட்வீட் கூட போடவில்லை. நவம்பர் 11ம் தேதி தான் திருமணம் நடக்கிறதா என்பதை கூட அவர் உறுதி செய்யவில்லை. ஆனால் இது அனிருத்திடம் இருந்து எதிர்பார்த்தது தான். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ட்வீட் போடும் பழக்கம் இல்லாதவர் எப்படி தன் திருமண அப்டேட் கொடுப்பார்?
கிரீஸில் தான் திருமணம் அதற்கு சென்னையில் இருந்து நான்கு தனி விமானங்கள் செல்கிறதுஎன்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் தற்போதோ பிஜார்ன் வேறு மாதிரி கூறியிருக்கிறார்.
அனிருத் பொண்டாட்டி: இதற்கிடையே காவ்யா மாறனை விட அவர் அப்பா கலாநிதி மாறனின் ரூ. 24, 600 கோடி சொத்துமதிப்பு விஷயம் வெளியாகி அடேங்கப்பா பெரிய சாம்ராஜ்ஜியத்திற்கே ராஜாவாகப் போகிறார் அனிருத். அவர் ஜாதகத்தில் எல்லாமே நல்லபடியாக இருக்கிறது என ரசிகர்கள் பேசுகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
அனிருத் ஜாதகம் அல்ல மாறாக டாரட் கார்டு மூலம் அவரின் மனைவியாக வரப் போகும் பெண் சென்னையில் அதுவும் அனி வீட்டிற்கு அருகில் வசிப்பார், அவரை காதலித்து திருமணம் செய்வார் என 13 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயஸ்ரீ என்பவர் தந்தி டிவி நிகழ்ச்சியில் கணித்துச் சொன்னது மட்டும் அப்படியே நடந்திருக்கிறது.
Source link
