ஜோதிட ரீதியாக நவம்பர் 2026 ஆம் ஆண்டில் நடக்கக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சிகள் மற்றும் கிரகங்களின் சேர்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சுக்கிரன்,புதன்,செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்களின் நகர்வுகள் நடக்கிறது. குறிப்பாக சுக்கிரன் இந்த மாதத்தில் மூன்று முறை தன்னுடைய இயக்கங்களை மாற்றுகிறார். இது போன்ற கிரக நிகழ்வுகள் எந்தெந்த ராசிகளுக்கு சாதகமாக அமையும் என தெரிந்து கொள்ளவும்.
ஜோதிடத்தில் ஒருராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒரு கிரகம் பெயர்ச்சியாக கூடிய நிகழ்வு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதை போல அதனுடைய பின்னோக்கி நகரக்கூடிய வக்கிர நிலை, வக்ர நிவர்த்தி, கிரகங்களின் சேர்க்கைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த விதத்தில் நவம்பர் மாதத்தில் சுக்கிரன் மற்றும் புதனின்வக்ர நிலை மற்றும் மற்ற நிவர்த்தி போன்ற நிகழ்வுகள் நடக்க உள்ளன. அது மட்டும் இல்லாமல் பல கிரக சேர்க்கைகளும் அற்புத பலன்களை தரக்கூடியதாக அமைய உள்ளது.
நவம்பர் மாதத்தில் நடக்க உள்ள முக்கிய கிரகபெயர்ச்சிகள்
நவம்பர் 6, 2026 : சுக்கிரன் கன்னியில் நுழைகிறார் நவம்பர் 12 : சிம்ம ராசியில் செவ்வாய் நுழைகிறார்
நவம்பர் 13 : துலாம் ராசியில் புதன் நேரடியாகத் திரும்புகிறார்
நவம்பர் 14 : கன்னி ராசியில் சுக்கிரன் நேரடியாக மாறுகிறார்
நவம்பர் 16 : சூரியன் விருச்சிக ராசியில் நுழைகிறார். கார்த்திகை மாதம் பிறக்கிறது.
நவம்பர் 22 : சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைகிறார்
அதுமட்டுமில்லாமல் சிம்ம ராசியில் குரு,கேது, செவ்வாய்ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கைஏற்பட உள்ளது. மேலும் துலாம் ராசியில்சூரியன், புதன்,சுக்கிரன் ஆகியகிரகங்களின்சேர்க்கை சில ராசிகளுக்கு நன்மைகள் தரக்கூடியதாக அமையும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும்? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்? இதோ முழு விவரங்கள்.
மேஷ ராசி
மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த நவம்பர் மாதம் புதிய வாய்ப்புகளை கொண்டு வரக்கூடியதாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள்பணியிடத்தில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகள் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலவில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். உங்களுடைய வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகளும்,அதற்காக நீங்கள் இருக்கக்கூடிய முயற்சிகள் நல்லபலனை தரக்கூடியதாக அமையும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், உங்களுடைய தன வரவை சரியான விதத்தில் சேமிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளவும்.
தொழில் முனைவோருக்கு ஏற்ற சூழலாகவும்,புதிய வாடிக்கையாளர்கள் ஏற்கவும் முடியும்.அதன் மூலம் தொழிலை அடுத்து நிலைக்கு கொண்டு செல்லக்கூடியமன உறுதி ஏற்படும்.குடும்பத்தில் உங்கள் துணையுடன் இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் இனிய பேச்சின் மூலம் தீர்க்க முடியும். காதல் வாழ்க்கையில் புரிதல் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மாதம்.
சிம்ம ராசி
சிம்ம ராசியினரைப் பொறுத்தவரை, நவம்பர் மாதம் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க கூடியதாகவும், அதன் மூலம் நீங்கள் நிர்ணயித்த இலக்கை அடையநீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளைவெற்றியை தரும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் அதன் சாதக பாதகமான சூழலை ஆராய்வது நன்மை தரும். புதிய வழிகளில் உங்களுடைய வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பழைய நினைவு விவகாரங்களில் முன்னேற்றங்கள் ஏற்படும். இந்த மாதத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கணிசமான அளவு பணத்தை சேமிக்க முடியும்.
தொழில்முனைவோர் மேற்கொள்ளும் புதிய திட்டங்கள் உதவும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க முடியும். உங்களுடைய குடும்ப விஷயங்களில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பெரியவர்களின் ஆதரவு மற்றும் ஆலோசனை கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும். சரியான அளவிற்கு ஓய்வு எடுப்பதற்கு நேரத்தை ஒதுக்கவும்.
துலாம் ராசி
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த நவம்பர் மாதம் உங்களுடைய உறவுகள் மேம்பட கூடியதாகவும், இலக்குகளை அடையவதற்கான சாத்தியம் உள்ள மாதமாக அமையும்.முடிவெடுக்கும் விஷயங்களில் அவசரப்படாமல் இருப்பதும்,பேச்சில் இனிமையை கடைப்பிடிப்பதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதிநிலை சார்ந்த புதிய வாய்ப்புகள் கண்டறிவீர்கள்.வருமானம் அதிகரிக்கும் என்றாலும் உங்களுடைய செலவுகளை கற்றுக் கொள் கொண்டுவரவேண்டியது அவசியம். முதலீடு செய்வதற்கு முன் அது தொடர்பான முழுமையான தகவல்களை சேகரிக்கவும்.
உங்களை குடும்ப சூழலில் மகிழ்ச்சியையும்,பிணைப்பும் அதிகரிக்கும்.முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிப்பது நம்மை தரும். காதல் உறவு நெருக்கமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.இந்த மாதத்தில் மன அமைதி மேம்படுத்துவதற்கு முன்னுரிமை தரவும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சேர்க்கை மற்றும் யோகங்கள் உங்களுடைய இலக்கைகளை அடைவதற்கான கவனத்தை தூண்டும்.நீங்கள் செய்யக்கூடிய தொழில் பொறுப்புடன் செயல்படுவீர்கள்.மேலும் புதிய பொறுப்புகளை எடுத்துக் கொள்ளவும்,திட்டங்களை செயல்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். பணம் தொடர்பான விஷயங்களை கவனமாக முடிவுகளை எடுக்கவும். பழைய நிலுவை தொகைகள் உங்களுக்கு வசதியாக வாய்ப்புகள் உண்டு.
உங்களுடைய தலைமைத்துவம் மற்றும் அனுபவம் பணியிடத்தில் மரியாதையை பெற்று தரும். வேலை மாற்றுவதற்கு அல்லது புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு முன் தொடர்பான தகவல்களை உறுதி செய்து கொள்ளவும். உங்கள் குடும்பத்தினருடன் இனிமையாக பேசுவதும், முடிவெடுக்கும் போது கலந்து ஆலோசிப்பது நன்மை தரும். தேவையற்ற மன கவலைகளை தவிர்த்து, வெளிப்படையாக பேசுவதால் உங்களுடைய குழப்பங்கள் தீரும்.
தனுசு ராசி
தனுசு ராசியினருக்கு நவம்பர் மாதம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுக்கவும், அதற்கான சேமிக்கவும் நினைப்பீர்கள். பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் நல்ல பலனை தரும். உங்களுக்கு கிடைக்கக்கூடிய புதிய வாய்ப்புகளை சிந்தனை உடன் பயன்படுத்திக் கொள்ளவும்.இந்த மாதத்தில் பயணங்கள் செல்வது,குடும்ப விவகாரங்கள் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக செலவுகள் அதிகரிக்கலாம்.
தொழில் அல்லது வியாபாரம் செய்யக் கூடியவர்கள் அதை விரிவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் துணையுடன் பயணம் மேற்கொள்வது, அவருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதற்கு ஆர்வம் காட்டியிருப்பீர்கள். அன்றாட செயல்பாடுகளில் நிதானத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதால் வாழ்க்கை நிலை முன்னேற்றம் அடையும்.
மீன ராசி
மீன ராசி அன்பர்களுக்கு நவம்பர் மாதம் உங்களுடைய தொழில் மற்றும் தனிப்பட்ட இலக்கை அடைவதற்கு சாதகமான காலமாக இருக்கும். புதிய வாய்ப்புகளை கண்டறிந்து, அதை திட்டமிட்டு செயல்படுத்துவதால் வெற்றி அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் உணர்ச்சி வசப்பட வேண்டாம். உங்களுடைய வருமானம் மற்றும் செலவு இடையே சமநிலையை கடைபிடிக்கவும். முதலீடு நல்லது சேமிப்பு சார்ந்த நிதி விஷயங்களில் உள்ள அபாயங்களை உணர்ந்து உயிர் வரவும். முடிந்தவரை நிதிஆலோசகர்களின் அறிவுறுத்தலின்படி செயல்படவும்.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நல்லுறவை பேணவும். கூட்டத்தினரின் ஆதரவு உங்களுக்கு மன அமைதியை தரும். உங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணுவதில் கவனம் செலுத்தவும். சமச்சீர் உணவுஎடுத்துக்கொள்ள தவறாதீர்கள்.
குறிப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்கள் மற்றும் தீர்வுகள், ஜோதிடம் மற்றும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. இவற்றிற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. இவற்றை நம்பிக்கை மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கருத்தில் கொள்ளவும். தனிப்பட்ட ஆலோசனை மற்றும் முழுமையான தகவல்களுக்கு, ஜோதிட நிபுணரை அணுகுவது சிறந்தது.
