பசும்பொன் செல்வாரா முதல்வர்? விஜய் முடிவில் திடீர் மாற்றம் : கவனம்பெறும் தேவர் குரு பூஜை – cm vijay decision on visiting pasumpon for devar guru puja draws attention in south tamil nadu

வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி தேவர் குருபூஜை பசும்பொன்னில் நடைபெறும். கடந்த காலங்களில் தமிழக முதல்வர்கள் பசும்பொன்னில் நினைவஞ்சலி செலுத்துவதற்குச் செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜயின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்குக் கிட்டத்தட்ட எட்டு தலித் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்றனர்.மேலும், பலர் அமைச்சர்களாக மாறியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளை வைத்து தனது கூட்டணியை உருவாக்கியிருக்கிறார் முதல்வர் விஜய். தவெகவின் முக்கிய வாக்கு வங்கி என்றால் அது தலித் மற்றும் சிறுபான் மையினரின் வாக்கு வங்கி தான்.தேவர் குருபூஜைக்கு முதல்வர்கள் செல்வது வழக்கம்என்றாலும் விஜய் சென்றால் அது நிச்சயம் பேசப்படும் பொருளாக மாறும். ஆகவே முதல்வர் செல்வதற்க்கான சூழல் இல்லை, ஆகவே அவர் போக மாட்டார் என தெரிவிக்கின்றனர் நிருபர்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த குருபூஜை

தங்களின் சமூகங்களின் முன்னேற்றத்திற்காகப் போராடிய தலைவர்களின் நினைவு நாளைக் குருபூஜையாகக் கொண்டாடும் பழக்கம் தமிழகத்தில் நிலவி வருகிறது. அந்த வகையில், தேவர் குருபூஜை, இமானுவேல் சேகரன் குருபூஜை எனத் தென் தமிழகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

அதிலும் குறிப்பாக, 1979ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தேவர் குருபூஜை மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதிலிருந்து, ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கருக்குத் தங்கக் கவசம் அணிவித்ததைத் தொடர்ந்து முக்குலத்தோர் வாக்குகள் அதிமுக வசம் சென்றன.

விஜய் வியூகம்

இந்தச் சூழலில்தான் கலைஞர், ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் ஏதோ ஒரு வகையில் வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடத்தை உண்மையில் விஜய் நிரப்பியிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். முதல்வர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, சட்டமன்றத்திலும் ஆட்சியிலும் பல்வேறு நடைமுறை மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.

அதே சமயத்தில், வாக்கு வங்கி அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியது என்பதால், முக்குலத்தோர் வாக்குகளையும் பெற வேண்டிய கட்டாயம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அமைச்சரவையில் இருக்கக்கூடிய சில அமைச்சர்களும் முதல்வர் விஜய் ஒருமுறை தேவர் குருபூஜைக்குச் சென்று வந்தால் நல்லது என எண்ணுவதாகச் சொல்லப்படுகிறது.

நழுவும் முதல்வர் விஜய்?

மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையைக் கொண்டிருந்தாலும், முதல்வர் விஜய் யாரையும் பகைத்துக்கொள்ளாமல் அரசியல் செய்து வருகிறார். அதற்குச் சமீபத்தில் நடந்த பிரதமர் சந்திப்பை ஒரு சாட்சியாகக் கூறலாம். முதல் நாள் ராகுலைச் சந்தித்த முதல்வர், அடுத்த நாள் பிரதமரைச் சந்தித்து சகஜமாகப் பேசியிருந்தார்.

அதேபோலவே, அனைத்து தலைவர்களின் பிறந்த நாட்களுக்கும் நினைவு நாட்களுக்கும் தனது வீட்டில் இருந்தபடியே அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். ஏற்கெனவே, இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கும் அதையே செய்தார். அந்த வகையில், தேவர் குருபூஜைக்கு முதல்வர் செல்ல வாய்ப்பில்லை என ஒரு சில தரப்பினர் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒருவேளை முதல்வர் சென்றால் அது தேவையில்லாத அரசியல் சர்ச்சைகளை உருவாக்கக்கூடும். இன்னும் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் காத்திருக்கிறது. இந்தச் சூழலில், முதல்வர் இதுபோன்ற ஒரு நகர்வை மேற்கொள்ள மாட்டார் என ஒரு சில நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link