குஷ்பு பதிலடி: என்ன கலாய்க்க நீங்க யாரு, என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

ட்ரோல்ஸ், குஷ்பு: சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் குஷ்பு சுந்தர் தன்னை யாராவது தரக்குறைவாக விமர்சித்தால் அவர்களுக்கு புரியும் பாஷையில் பதில் அளித்து வருகிறார். அப்படி அவர் பதிலடி கொடுத்தது பல முறை வைரலாகியிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைனில் கிண்டல் செய்பவர்கள் குறித்து JFW டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் அவர்.

குஷ்பு சுந்தர் கூறியதாவது, ட்ரோல் செய்பவர்களுக்கு நான் சில சமயம் பதில் அளிப்பது உண்டு. அப்படி பதில் கொடுக்கும்போது அவர்களுக்கு பிடித்த பாஷையில் தான் கொடுப்பேன். மக்களுக்கு என்னை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஒரு நடிகையாக தான் தெரியும். வீட்டில் நான் எப்படி இருக்கிறேன். என்ன செய்கிறேன் என்று எதுவும் தெரியாது. ஆனால் நிஜத்தில் நான் இப்படித் தான் என அவர்களாக யூகித்துக் கொண்டு விமர்சிப்பது சரியல்ல.

அம்மா, மகள்: நான் நடித்த படங்களை பார்த்து அதில் என் நடிப்பு பிடிக்காவிட்டால் தாராளமாக அதை சொல்லலாம். நான் பப்ளிக் ஃபிகர் ஆனால் பொது சொத்து இல்லை. நீங்கள் யாராவது என்னை பெற்ற தாயையோ இல்லை நான் பெற்ற மகள்களையோ விமர்சித்தால் நானும் பதிலுக்கு அதையே தான் செய்வேன் என்றார்.

குஷ்புவை விமர்சித்தால் உடனே உங்கம்மா, உங்கக்கா என குடும்பத்தை இழுக்கிறார் என்று சமூக வலைதளவாசிகள் கூறிய நிலையில் தான் தன் தாயை, மகள்களை குறி வைத்து தரக்குறைவாக பேசுவதை பார்த்தால் நானும் அதே மாதிரி பேசுவேன் என விளக்கம் அளித்திருக்கிறார்.

பாக்யராஜ் காலமானார்: இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு கோவாவில் இருந்து சென்னை வந்த நிலையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கோவாவில் எங்க பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடீங்களே, நேற்று தானே உங்களை பார்த்தோம், இன்று இறந்துவிட்டீர்கள் என்பதை நம்ப முடியவில்லை என அவந்திகா, ஷ்ரவன் சீனிவாசனின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களின் வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

அப்பொழுது குஷ்பு சுந்தர் தன் மகளின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார். அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் குஷ்புவை கண்டபடி விளாசினார்கள். அங்கு ஒரு உயிர் போய்விட்டது. இங்கு நீங்கள் என்னவென்றால் என்னை பார், என் மகளை பார், மருமகனை பார். நாங்கள் எல்லாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என புகைப்படம் வெளியிடலாமா?. இறந்த பாக்யராஜுக்கு ஒரு மரியாதை வேண்டாமா என பயங்கரமாக பேசினார்கள்.

குஷ்புவுக்கு தெரியும்: அது குறித்தும் குஷ்பு தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். குஷ்பு தெரிவித்ததாவது, பாக்யராஜ் இறந்த நேரத்தில் என் மகள் கல்யாண புகைப்படங்களை வெளியிட்டது தவறு என்றார்கள். என்னை விளாச நீங்க யார்னு கேட்கிறேன். என் மகளின் திருமணம் சந்தோஷமான விஷயம். அதே சமயம் நண்பர் பாக்யராஜின் மரணத்தால் கவலையில் இருந்தேன். இரண்டையும் எப்படி பேலன்ஸ் செய்வது என எனக்கு தெரியும் என்றார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

குஷ்பு எதை பற்றி ட்வீட் செய்தாலும் அதை சிலர் பாராட்டுவார்கள், சிலர் மோசமாக பேசுவார்கள். முதல்வர் ஜோசப் விஜய்க்கு திருமண பத்திரிகை கொடுத்த புகைப்படத்தை குஷ்பு வெளியிட்டதும், என்ன பாஜகவில் இருந்து தவெகவுக்கு தாவப் போகிறீர்களாஎன்றார்கள். ஆனால் அதை குஷ்பு கண்டுகொள்ளவில்லை. ஒரு சில நேரங்களில் தான் பதிலடி கொடுப்பார்.

Source link