பெண் பிள்ளைகளை தொட்டால் நெஞ்சில் தோட்டா பாயும்.. நாதக ஆட்சியில் நடக்கும்- சீமான் ஆவேசப் பேச்சு! – seeman warns if you touch young women, a bullet will pierce your chest in nellai ntk campaig

பெண் பிள்ளைகளை தொட்டால் நெஞ்சில் தோட்டா பாயும் என நெல்லையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.அந்த வகையில் திராவிட கட்சிகளுக்கு எதிராக வழக்கம் போல், சீமான் இந்த முறை தனித்து களமிறங்க உள்ளார். அந்த வகையில், இந்த தேர்தலில் நெல்லை தொகுதியில் பா. சத்யா, அம்பாசமுத்திரம் தொகுதியில் சிவசங்கரன், பாளையங்கோட்டை தொகுதியில் சங்கரநாராயணன், நாங்குநேரி தொகுதியில் செல்வம் மற்றும் ராதாபுரம் தொகுதியில் கிரிஜா தாமரைப்பாண்டியன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்த வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்க்கொண்டார்.

சட்டமன்ற தேர்தல் – களத்தில் நாதக

அப்போது பேசிய அவர்,இங்கு ஒரு பிரச்சனை என்றால் சொல்லலாம். ஆனால், இங்கு பிரச்சனையில் இருந்து வாழ்ந்து வருகின்றோம். நான் ஒரு வேலை ஆட்சிக்கு வந்தால்,உலக தரத்தில் உள்ள கல்வியை நம் பிள்ளைகளுக்கு கட்டணமில்லாமல் தருவேன்.உலக தரம்வாய்ந்த கல்வி பின்லாந்து, தென்கொரியா, சிங்கப்பூரில் உள்ளிட்ட நாடுகளில் தான் தரமான கல்வி வழங்கப்படுகிறது.நம் நாடு எந்த தரத்திலும் இல்லை என்று கூறினார். பிரதமர் மோடிக்கு என்ன மருத்துவம் கிடைக்குமோ, குடியரசுத் தலைவருக்கு என்ன மருத்துவம் கிடைக்குமோ,முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன மருத்துவம் கிடைக்குமோ, அது திருநெல்வேலியில் இருக்கின்ற கடைக்கோடி மகனுக்கு கிடைக்க செய்வேன் என்று கூறினார்.

கொதித்த விஜய்…திமுக மீது கடும் விமர்சனம்!

பெண் பிள்ளைகளை தொட்டால் நெஞ்சில் தோட்டா பாயும்

பெண் பிள்ளைகளை தொட்டால் நெஞ்சில் தோட்டா பாயும்.வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் பிள்ளைகளை பெற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு நாங்கள் கற்றுத் தருகிறோம். கல்வியை காசில்லாமல் தருகிறேன்.வேலை இல்லாதவர்களுக்கு ரூ.4,000 என்கிறார்கள்.ஆனால் வேலை கொடுப்பேன் என்று சொல்லவில்லை. இழந்த கச்சத்தீவையும், காவிரியையும் மீட்போம் என்று யாரும் சொல்லவில்லை.நான் மட்டுமே இலவசம் தரமாட்டேன். அதை ஒழிப்பேன் என்று பேசி வருகிறேன் என்று கூறினார். ஒரு முறை எனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

சீமான் நெல்லை தேர்தல் பிரச்சார பேச்சு

தொடர்ந்து பேசிய அவர்,அடிப்படை சாலை வசதி இல்லை.. மருத்துவம் இல்லை.. போதிய கல்வி வசதி இல்லை.தொடர் பெண்பிள்ளைகளுக்கு பாலியல் வன்கொடுமை,சிறுபிள்ளைகள் முதல் போதைபொருள் பழகத்திற்கு அடிமையாகி உள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக ஓட்டு போடப்போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.ஒரு பக்கம் லஞ்சம் , ஊழல். மறுபக்கம் உண்மை நேர்மை.பிரச்சனையை தந்தவர் ஒருபக்கமாக இருக்கிறார்கள். மறுப்பக்கம் பிரச்சனை தீர்க்க வந்த சீமான் ஒரு பக்கம்.. நீங்க எந்த பக்கம் நிற்க போகிறீர்கள்? நானும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உங்களை போல் தான் நின்றேன்.ஆனால் என்ன செய்தார்கள்? கடலுக்குள் மீன் பிடிக்க முடியாத சூழலில் இப்போது இருக்கிறோம். சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். ஈழத்தில் உரிமைகாக போராடினோம் சுட்டு வீழ்த்தபட்டார்கள்.

நெல்லை பலம் யாருக்கு?

அப்போது எல்லாம் செய்தது காங்கிரஸ். இன்று திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் ஓட்டு கேட்டு வருகிறது.கட்சத்தீவு நம்முடைய சொந்த நிலம் . அதனை கருணாநிதி எடுத்துக் கொடுத்துவிட்டார். அங்கு சென்றால் சுட்டுக்கொள்கிறார்கள் கேட்க நாதி இல்லை என்று கூறினார். சீமானின் இந்த பரப்புரை மக்களுக்கு உத்வேகத்தை அளித்தாலும் தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு பலம் பொருந்திய பகுதியாக பார்க்கபடுகிறது. இப்படி இருக்கையில், சீமான் இந்த பரப்புரையால் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதை வரும் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தான் பிரதிபலிக்கும்.