IND vs NZ 1st T20 – பௌலர்கள் மீது தப்பு இல்ல, நியூசி 225 அடிக்க இதுதான் காரணம்: ஷ்ரேயஸ் ஐயர் ஓபன் டாக் – how new zealand scored 225 runs against indian team bowlers in 1st t20 shreyas iyer explain

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 225/4 ரன்களை அடித்த நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 230/6 ரன்களை அடித்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றனர்.

சொதப்பிய இந்திய பௌலர்கள்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய பௌலர்கள் அனைவரும் 10 எகனாமியில்தான் பந்துவீசினார்கள். எந்த பௌலரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புவனேஷ்வர் குமார், 4 ஓவர்களில் 49 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.

அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்களில் 45/1 ரன்களையும், மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 40/1 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். மேலும், அக்சர் படேல், 4 ஓவர்களில் 51/1 ரன்களையும், நிதிஷ் ரெட்டி 4 ஓவர்களில் 40/0 ரன்களையும் விட்டுக்கொடுத்து சொதப்பினார்கள்.

ஷ்ரேயஸ் ஐயர் பேட்டி : இப்படி, இந்திய பௌலர்கள் சொதப்பியிருக்கும் நிலையில், பௌலர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பதில் அளித்தார்.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேட்டிகொடுத்த ஷ்ரேயஸ் ஐயர், ‘‘நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங் ஆடியபோது, பிட்ச் ஸ்லோ விக்கெட்டாக இருந்தது. இதனால், நியூசிலாந்து அணியால், துவக்கத்தில் ரன்களை குவிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, பனியின் தாக்கம் வர ஆரம்பித்ததும், பிட்சில் ஸ்விங், எக்ஸ்ட்ரா பவுன்ஸ் காணாமல் போனது. இதனால், நியூசிலாந்து அணியினரால் சிறப்பாக பேட்டிங் ஆட முடிந்தது’’ எனக் கூறினார்.

நமன் தீர் சிறப்பாக பேட்டிங் ஆடியது குறித்துப் பேசிய ஷ்ரேயஸ் ஐயர், ‘‘நமன் தீர் ஒரு சிறந்த வீரர். இவரால், முக்கியமான கட்டத்தில் 2-3 ஓவர்களை வீச முடிகிறது. பேட்டிங்கிலும், சிறந்த பங்களிப்பை வழங்குகிறார். இப்படி, இரண்டு வீரர்கள் செய்யும் வேலையை சிறப்பாக செய்வது, இந்திய அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கும். சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் தங்களது அனுபவத்தை பயன்படுத்தி அதிரடியாக விளையாடுகிறார்கள். பெரிய இலக்கை துரத்தும்போது, பவர் பிளேவில் 90+ ரன்களை அடிப்பது, மிக முக்கியவம். இவர்களால், இதனை தொடர்ச்சியாக செய்ய முடிகிறது’’ என பாராட்டிப் பேசினார்.

ஹர்திக் பாண்டியா வேலையை செய்கிறார்: இந்திய டி20 அணியில், யூசுப் பதான், க்ருணால் பாண்டியாவுக்கு அடுத்து பேட்டிங்கிலும் அதிரடி காட்டும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை. அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களால் தொடர்ச்சியாக 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியாத நிலைமை இருந்தது.

தற்போது, நமன் தீர், ஒரு முழுநேர பேட்டரைப் போல தொடர்ச்சியாக 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுகிறார். இது இந்திய அணிக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணி, ஒரு பேட்டரை குறைத்துக் கொண்டு, ஒரு முழுநேர பௌலரையோ அல்லது ஒரு ஆல்ரவுண்டரையோ அணியில் சேர்க்க முடியும். ஹர்திக் பாண்டியா செய்த வேலையை, தற்போது நமன் தீர் செய்வது, இந்திய அணிக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

Source link