கோவை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
கிட்னி திருட்டு புகழ் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர், கதிரவன், தேர்தல் பரப்புரையின் போது, தங்கள் ஊர் ஏரிக்கு தண்ணீர் இல்லை என்று கோரிக்கை வைத்த கிராம மக்களை, லூசு என்றும், நீ ஒன்றும் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் இழிவாகப் பேசியிருக்கிறார்.
வழக்கமாக, தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தைக் காட்டுவார்கள். ஆனால், தேர்தல் பிரசாரம் செய்யும் ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை.
ஐந்து ஆண்டுகளாக அப்பாவி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுக எம். எல்.ஏ. கதிரவனுக்கு, தற்போது தேர்தல் அறிவித்து விட்டதால், ஏரியைச் சீரமைக்க முடியவில்லையாம். ஐந்து ஆண்டுகளாக அவரது தந்தைக்கு 15 கோடியில் வெளிநாட்டு கார் வாங்க உழைத்துக் கொண்டிருந்தவருக்கு, வாக்களித்த மக்களைப் பற்றிச் சிந்திக்க ஏது நேரம்?
திமுக எம்எல்ஏவின் திமிருக்கும், ஆணவத்திற்கும், மணச்சநல்லூர் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் சரியான பதிலளிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
