Venus Rise 2026 Benefits,சந்திரோதய கௌரி விரத நாளில் சுக்கிரன் உதயம்: திருமண வாய்ப்புகள் மற்றும் நிதி முன்னேற்றம் பெறக்கூடிய ராசிகள் – venus rises on chandrodaya gauri vrat 2026: zodiac signs that may see marriage prospects and financial gains

ஐப்பசி பௌர்ணமிக்கு பின்னர் வரக்கூடிய சந்திரோதய கௌரி விரத நாளில், அஷ்டமான நிலையில் இருக்கக்கூடிய சுக்கிரன் உதய நிலையை அடையுள்ளார். இந்த மாற்றத்தால் சில ராசிகளின் வாழ்க்கையில் தொழில் முன்னேற்றம், நிதி ஆதாயம் கிடைப்பது, திருமணம் கைகூடுவது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். எந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் அதிகம் கிடைக்கும், சாதகமான பயன்கள் பெறுவார்கள் என தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிர பகவான் செல்வம், சுகபோகங்கள், காதல், உலக இன்பங்களை தரக்கூடியவர். இவர் தற்பொழுது துலாம் ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வந்தாலும், சூரியனின் தாக்கத்தால் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி, சந்திரன் உதயமாக உள்ளார். இதன் காரணமாக துலாம், கன்னி நேர்மையான பலன்கள் கிடைப்பதோடு, திருமணம், நிதி நன்மைகள் என பல்வேறு ஆதாயங்களை பெற உள்ளனர்.

சுக்கிரனின் உதய நிலை

ஜோதிடத்தில் சுக்கிரன் சுப கிரகம் என குறிப்பிடப்படக்கூடிய நிலையில், இப்பொழுது ஆட்சி பெற்று வரக்கூடிய நிலையில் அதிக நன்மைகளை தர வேண்டும். ஆனால் வக்கிரநிலையில் பயணித்துக் கொண்டிருப்பதால் எதிர்பார்த்த தளம் குறைவாக கிடைப்பதோடு, சூரியனும் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் அஸ்தமன நிலையில் உள்ளார். இதனால் சுக்கிரனின் ஆற்றல் மிகக் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் ஐப்பசி பௌர்ணமிக்குப் பிறகு அக்டோபர் 28ஆம் தேதி காலை 7:35 மணிக்கு, சுக்கிரன் உதயமாகிறார்.

கடக ராசியில் சுக்கிர உதயத்தின் தாக்கம்:

கடக ராசி அன்பர்களுக்கு சுக்கிரனின் உதய நிலை, உங்களுடைய பொருளாதார நிலையை உயர்த்தக் கூடியதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு, வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவார்கள். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான பலனையும், புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு, போட்டிகள் குறையும். முதலீடு தொடர்பான விஷயங்களில் கவனமாக சிந்தித்து செயல்படவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், துணையுடன் இணக்கமான சூழலும் நிலவும்.

கன்னி ராசியில் சுக்கிர உதயத்தின் தாக்கம்:

கன்னி ராசிக்காரர்களுக்கு, தன ஸ்தானத்தில் சுக்கிரன் உதய நிலையை அடைகிறார். மேலும் உங்களுக்கு தொழில் தொடர்பான முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். வேலையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்த்து நல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணமும், யோசனைகளும் அதிகரிக்கும். நிதி மேலாண்மை அடையக்கூடிய அற்புத சூழல் நிலவும், அதுமட்டுமல்லாமல் திருமணம் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புகள் உண்டு.

துலாம் ராசியில் சுக்கிர உதயத்தின் தாக்கம்:

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், அவருடைய உதயநிலை உங்களுக்கு பலவிதத்தில் சாதகமான பலனை தரக்கூடியதாக அமையும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க பெறலாம். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பெறுவீர்கள். தொழில் செய்யக் கூடியவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், நியாபகமான வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்களுடைய நிதி நிலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.

Source link